''சசிகலாவை வரவேற்க போலீஸ் அனுமதி கிடைச்சாச்சு''... மகிழ்ச்சியில் திளைக்கும் டி.டி.வி தினகரன்!
சென்னை: சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி கிடைத்துள்ளது என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
Recommended Video

தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை வரை ராணுவ கட்டுப்பாட்டோடு சசிகலாவை வரவேற்போம் என்று தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைச்சர்கள் பரபரப்பு புகார்
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வருகை தருகிறார். தமிழகத்தில் மிகப் பெரிய வன்முறை, கலவரத்துக்கு சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்; இந்த பழியை அதிமுக மீது போடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்; ஆகையால் இதனை தடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதியிடம் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் புகார் கொடுத்துள்ளனர்.

காவல்துறை அனுமதி
ஆனால் இதனை மறுத்த டி.டி.வி தினகரன் இவர்களே ஏதாவது செய்து விட்டு, எங்கள் மீது பழியை போட பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி கிடைத்துள்ளது என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுளளதாவது:- சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சசிகலாவை வரவேற்க அனுமதி கிடைத்துள்ளது. சசிகலாவை வரவேற்க நடக்கும் ஏற்பாடுகளை பார்த்து அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து வருகின்றனர்.

உணர்வுரீதியிலான பாசம்
சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ளவர்களே மக்களுக்கு பீதியை ஏற்படுத்துகின்றனர். மக்களுக்கு பீதியை ஏற்படுத்த்தும் வகையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். எங்க அப்பன் குதிரைக்குள் இல்லை என்று இவர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு படையெடுத்து கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டு எதாவது செய்து அம்மாவின் உண்மை தொண்டர்கள் மீது பழி போட சாதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உண்மை தொண்டர்கள் உணர்வுரீதியில் காட்டும் பாசமெல்லாம் கூலிக்கு ஆட்களை திரட்டுபவர்களுக்கு புரியாது.

ராணுவ கட்டுப்பாட்டு வேண்டும்
யாரால் அமைச்சர் பதவியில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டு பேசுகிறார்கள். சசிகலாவுக்கு அளிக்கும் வரவேற்பை மிகுந்த கவனத்தோடு அமைத்து கொள்ள வேண்டும். தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை வரை ராணுவ கட்டுப்பாட்டோடு சசிகலாவை வரவேற்போம். இதனால் போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது. வரவேற்பின்பொது கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று டி.டி.வி தினகரன் கூறினார்.
-
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications