பெங்களூர் பந்த்: போராட்டத்தை அவங்க சமாளிக்கட்டும்! குறுவை சாகுபடியை நாம் சமாளிக்கலாம்! துரைமுருகன்
சென்னை: காவிரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் குறுவை சாகுபடியை சமாளிக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடகா அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடகா அரசுக்கு கடந்த 18-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை ஏற்க கர்நாடகா மறுத்துவிட்டது.
இந்த நிலையில் மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் தமிழகம்- கர்நாடகா இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காவிரி பிரச்சினை தொடர்பாக கன்னட அமைப்புகள் சார்பில் இன்று பெங்களூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த பந்த் போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இந்த நிலையில் தமிழர்களின் உடைமைகள் பாதிக்கப்படும் என்பதால் பெங்களூர் செல்லும் தமிழக லாரிகளை எல்லையிலேயே நிறுத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அது போல் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தமிழக பேருந்துகளும் நேற்று இரவு முதல் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் பந்த் போராட்டம் தொடங்கவுள்ள நிலையில் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றும் வழிமுறை இருப்போருக்கு Work from home ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஓசூர் சாலை இன்று வெறிச்சோடி கிடக்கிறது. இந்த நிலையில் பந்தை அமைதியான முறையில் நடத்துமாறு முதல்வர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த பந்த் குறித்து அமைச்சர் துரைமுருகன் சென்னை அறிவாலயத்தில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் விவசாயிகளின் போராட்டத்தை அந்த மாநில அரசாங்கம்தான் சமாளிக்க வேண்டும். இந்த ஆண்டு குறுவை சாகுபடியை நாம் சமாளிக்கலாம் என்றார் துரைமுருகன்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications