சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முருகா முருகா.. என்ன இது.. வர வர துரைமுருகன் இப்படி பேச ஆரம்பிச்சுட்டாரே

4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் முருகன் பெயரை கொண்டவர்கள் என துரைமுருகன் பேசினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலின் நாட்டின் ஜனாதிபதியாக வருவார் : அடித்து சொல்லும் துரைமுருகன்!- வீடியோ

    சென்னை: துரைமுருகன் ஏன் இப்பவெல்லாம் இப்படி பேச ஆரம்பித்துவிட்டார் என தெரியவில்லை. துரைமுருகன் மட்டுமில்லை.. கருணாநிதி இறந்த பிறகு திமுகவே லைட்டாக தனது பாதையை மாற்றியிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    நாத்திக கட்சி... பகுத்தறிவு கொள்கை, என்ற பாதையில் பயணித்து வந்த திமுக, கருணாநிதி மறைவுக்கு பிறகு வேறு தினுசாக தெரிய ஆரம்பித்தது.

    திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு முதல் பல உதாரணங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது கொஞ்சம் அதிகமாகவே காணப்பட்டது. குறிப்பாக கி.வீரமணி கிருஷ்ணரை விமர்சித்த பிறகு!

    பிளவுவாதிகளின் தலைவர் மோடி.. 'டைம்' இதழில் பரபரப்பு அட்டைப்பட கட்டுரை! பிளவுவாதிகளின் தலைவர் மோடி.. 'டைம்' இதழில் பரபரப்பு அட்டைப்பட கட்டுரை!

    இந்து மதம்

    இந்து மதம்

    இதையடுத்து வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று, "நாங்கள் இந்துகளுக்கு எதிரானவர்கள் அல்ல. எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. என் மனைவி கோயிலுக்கு செல்வதை நான் தடுத்ததில்லை. கோயில்கள் கூடாது என்பது திமுகவின் கொள்கை அல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை" என்று உரக்கவே சொன்னார் முக ஸ்டாலின்!

    ஓட்டப்பிடாரம்

    ஓட்டப்பிடாரம்

    இப்போது துரைமுருகன் பேசியதன் அர்த்தம் என்ன என்று புரியவில்லை. வரும் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்து துரைமுருகன் பிரச்சாரம் செய்து வருகிறார். இதில் ஓட்டப்பிடாரத்தில் அவர் பேசியபோது, "எங்களை குறிப்பிட்ட மக்களுக்கு எதிரியாக சித்தரிக்கும் வேலை நடக்கிறது. ஆனால் அது கண்டிப்பாக எடுபடாது.

    முருக பக்தர்கள்

    முருக பக்தர்கள்

    நீங்க ஒரு விஷயத்தை கவனீச்சீங்கன்னா தெரியும், 4 தொகுதியில் எங்க கட்சி வேட்பாளர்கள் முருக பக்தர்கள்தான். அவங்க பேரை கவனிங்க.. ஓட்டப்பிடாரம் சண்முகய்யா, திருப்பரங்குன்றம் சரவணன், அரவக்குறிச்சி செந்தில்நாதன், சூலூர் பழனிசாமி! இவங்க 4 பேர் பெயரிலும் முருகன் இருக்கிறார். இவர்கள் முருக பக்தர்கள். இந்த துரைமுருகனே இதை சொல்லியபின் வேறென்ன வேண்டும்?" என்றார்.

    திடீர் பல்டி

    திடீர் பல்டி

    திமுகவின் நிலைப்பாடுகள் எப்போதுமே தெளிவாக இருக்கும், உறுதியாக இருக்கும், வலுவாகவும் இருக்கும். அத்தனை சீக்கிரம் கருணாநிதி எதையும் சமரசம் செய்து கொள்ள மாட்டார். முரண்படுபவர்களிடம் கூட சமரசம் செய்து கொள்ளாமல் அவர்களை சமாதானப்படுத்தி தன் பக்கம் வைத்துக் கொள்வார். ஆனால் இப்போதைய திமுக, எல்லாவற்றுக்கும் பயந்து பல்டி அடிப்பது போலவே தெரிகிறது.

    முருகா.. முருகா

    முருகா.. முருகா

    இப்படி ஒரு பிரச்சாரம் திமுகவுக்கு தேவையா? முருகர் பெயர் இருக்கபோய் துரைமுருகன் இப்படி சொல்கிறார், ஒருவேளை வேறு பெயரில் வேட்பாளர்கள் இருந்தால் என்ன சொல்லி வாக்கு கேட்டிருப்பார்? என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம்.. தன் பெயரிலேயே "முருகன்" இருக்கிறாரே.. என்று துரைமுருகன் சொல்லாதது ஆச்சரியம்தான்!

    English summary
    Durai Murugan said that the four DMK Candidates are named after Lord Murugan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X