"ரூ.250 கோடி சொத்து.. அரண்மனை போன்ற பங்களா.." வைகோ பற்றி கேட்டதும் பொரிந்து தள்ளிய மல்லை சத்யா
சென்னை: மதிமுகவில் வெடித்த உட்கட்சி குழப்பம் காரணமாக மல்லை சத்யா மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். துரை வைகோவுக்கு அரசியல் தெரியாது என்றும் அவருக்கு ரூ.250 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாகவும் சாடினார்.
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா உள்ளிட்டோர் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது வைகோ மற்றும் துரை வைகோ மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். வைகோவுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

துரை வைகோ
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வைகோ சிறையில் பொடா சட்டத்தில் சிறையில் இருந்தபோது, தமிழ்நாடு முழுக்க அவரது கைதைக் கண்டித்து நடைப்பயணங்கள் நடத்தினோம். அந்த நடைப்பயணங்களில் உணர்வுப்பூர்வமாகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆனால், இப்போது வைகோ நடைப்பயணத்தில் பங்கேற்பவர்களுக்குப் பணம் கொடுத்துக் கூட்டி வருகிறார்கள். தினசரி ரூ.1000 கொடுப்பதாகச் சொல்லிக் கூட்டி வந்துள்ளதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளது பரிதாபமாக இருக்கிறது.
திமுக ஆட்சி அமைந்து 4.5 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிறப்பான ஆட்சி நடந்து வரும் சூழலில், இத்தனை ஆண்டுகள் வைகோ அமைதியாக இருந்தார். இப்போது திடீரென மதுவுக்கு எதிராகப் பேச ஆரம்பித்துள்ளார். திமுகவுக்கு எதிராகவே நடைப்பயணத்தைச் செய்வது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. மது விவகாரம் குறித்து முதல்வரை சந்தித்தே வைகோ கோரிக்கை வைத்திருக்கலாம். ஆனால், காணாமல் போய் இருக்கும் மதிமுக இருக்கிறது என்ற பிம்பத்தைக் காட்டவே அவர் நடைப்பயணம் போகிறார்.
மக்கள் நல கூட்டணி ரகசியம்
2016ல் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டதாகச் சொல்கிறார்களே.. அதில் உண்மை இருக்கிறதா என்ற கேள்விக்கு மல்லை சத்யா, "அதில் நிறைய ரகசியங்கள் உள்ளன. அதை இப்போது சொல்ல முடியாது" என்று மட்டும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஸ்டாலின் சிறு வயதில் இருந்தே திமுகவில் இருந்தவர். கட்சிப் பணிகளைச் செய்தவர். ஆனால், அவருக்கு திமுகவில் முக்கியத்துவம் கொடுத்த போதே அதை எதிர்த்தவர் வைகோ.. அப்படியிருக்கும்போது துரை வைகோ 28 ஆண்டுகள் என்ன செய்து கொண்டு இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. குடும்பத்தை எல்லாம் செட்டில் செய்துவிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் திடீரென பாராசூட்டில் தலைமைக்கு வருவதை ஏற்க முடியாது. நான்தான் தலைவன் என அவர் சொல்வதை ஏற்க முடியாது.
ரூ.250 கோடி சொத்து
இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்யாமல் வியாபாரம் செய்து வந்தவர் தான் துரை வைகோ. சிகரெட் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்து வந்தார். இப்போது திடீரென அரசியலில் குதித்து இருக்கிறார். ஸ்டாலினுக்கு இருக்கும் அரசியல் பாரம்பரியம், இவருக்கு இல்லை என்பதே எங்கள் குற்றச்சாட்டு.
மேலும், மதுபான ஆலைகளை நடத்தி வந்தனர். அதை உறவினரிடம் விற்றுவிட்டதாகச் சொன்னாலும் இப்போதும் அதில் இருந்து வருமானம் வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலேயே அவர்களுக்கு ரூ.250 கோடிக்கு சொத்து இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே ரூ.5 கோடி மதிப்பில் அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கினார்கள். இப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிரவுண்டில் அரண்மனை போன்ற வீட்டைக் கட்டியுள்ளனர். போன வாரம் தான் புதுமனை புகுவிழா நடத்தினார்கள். இருப்பினும், யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அதையும் கூட ரகசியமாக நடத்தினர்.
பாஜகவுடன் இணைந்து
துரை வைகோவிற்கு மத்திய அமைச்சராக வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. இதன் காரணமாகவே வைகோ பாஜகவுடன் இணைந்து செயல்பட நினைக்கிறார். இப்போது அன்புமணியை ஏன் கட்சிக்குள் கொண்டு வந்தோம் என ராமதாஸ் வருந்துகிறார். அதேபோல ஒரு நாள் நிச்சயம் வைகோவும் வருத்தப்படுவார்.
சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுத்தவர் வைகோ.. 1998ம் ஆண்டு அதிமுக தான் மதிமுகவுக்கு நாடாளுமன்ற வாசலைத் திறந்தது.. அப்படியிருக்கும்போது அதிமுக கூட்டணி தர்மத்தை மீறி வாஜ்பாய் அரசுக்கு வைகோ தார்மீக ஆதரவு கொடுத்தார். இதுவே அப்போது அதிமுகவுக்குக் கோபத்தை ஏற்படுத்தி, கூட்டணியை முடிவுக்குக் கொண்டு வந்தது" என்றார்.
மேலும், மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைவரும் இணைந்து புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகவும் வரும் 20ம் தேதி புதிய கட்சி தொடர்பான அறிவிப்பு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications