பிறந்தநாள் கொண்டாடும் வழக்கமே எனக்கில்லை! தொண்டர்களுக்கு தொந்தரவு தராத துரை வைகோ!
சென்னை: தனக்கு பிறந்தநாள் கொண்டாடும் வழக்கமே கிடையாது என்று கூறியுள்ள துரை வைகோ, தனது பிறந்தநாளான இன்று யாரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றுக் கொள்ளவில்லை.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் நிர்வாகிகளுக்கோ, தொண்டர்களுக்கோ எவ்வித சிரமத்தையும் கொடுக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இதனிடையே பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை என்பதை அவரே கூறியிருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு;

துரை வைகோ
பொதுவாக எனக்கு பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் இல்லை. இதுபோன்ற கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இயக்கத் தலைவர் வைகோ தன்னுடைய பிறந்தநாளை ஒருபோதும் கொண்டாடியது இல்லை. நீண்ட காலமாக தன் பிறந்தநாள் தேதியையே ரகசியமாக வைத்திருந்தவர் அவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அவருடைய பிறந்தநாள் தேதியே கழகத் தோழர்களுக்கு தெரிய வந்தது.

ஆதாயமில்லா மக்கள் பணி
நம் தலைவர் அவர்கள் தன் பிறந்தநாளை கொண்டாட ஒருபோதும் விரும்புவது இல்லை. அதே மனநிலை தான் எனக்கும். பிறந்தநாள் கொண்டாட்டங்களின் மீது பெரிய ஈடுபாடு எதுவும் இல்லை.'ஆதாயமில்லா மக்கள் பணி..!சமரசம் இல்லா மக்கள் நலன்..!' என்ற கொள்கை உறுதியோடு மக்களுக்கு பணியாற்றவே இந்த அரசியலில் நான் பயணிக்கிறேன்.

வீண் விளம்பரங்கள்
நம் கழகத் தோழர்கள் அன்பின் மிகுதியால் எதாவது செய்ய விரும்பினால் ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் போன்ற இடங்களில் அவர்களுக்கு ஒரு வேளை உணவளித்தால் கூட போதுமானது. பிளக்ஸ், போஸ்டர் போன்ற ஆடம்பரங்களை, வீண் விளம்பரங்களை தவிர்க்க வேண்டுகிறேன். எந்த செயலும் அர்த்தமற்றதாகவோ, ஆடம்பரமாகவோ இருக்க கூடாது என நினைக்கிறேன்.

வாழ்த்து சொல்வது இல்லை
நான் பெரும்பாலும் கழகத் தோழர்களின் பிறந்தநாளில் கூட அலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்வது இல்லை. ஒருவருக்கு வாழ்த்து சொல்லி ஒருவருக்கு வாழ்த்து தெரிவிக்க இயலாமல் போனால் அவர்களின் மனம் புண்படும் என்பதால் இதுபோன்ற நடைமுறைகளை நான் முற்றாக தவிர்த்து விடுகிறேன். எனக்கும் மற்றவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என நான் விரும்புவது இல்லை.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications