கட்சி உடையவில்லை..சீட்டு கிடைக்காததால் அப்படி பேசுறாங்க..கட்சி “இணைப்பு” குறித்து துரை வைகோ விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைத்துவிடலாம் என சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் கூறிய நிலையில், நடைபெற்ற முடிந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்காததால் செவந்தியப்பன் காழ்ப்புணர்வோடு செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளரும், பொதுச்செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ விளக்கமளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மதிமுக செயலாளர் செங்குட்டுவன் மற்றும் விருதுநகர் செயலாளர் சண்முக சுந்தரம் உட்பட பல மூத்த நிர்வாகிகள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, மதிமுகவில் நடைபெறவுள்ள உட்கட்சி தேர்தல், கட்சி விதிகளின்படி நடைபெறவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.

துரை வைகோ

துரை வைகோ

மேலும் கட்சியின் தலைமை பொறுப்பை துரை வைகோவுக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர்கள், கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருத்தினர். அப்போது அங்கு கூடிய மற்றொரு பிரிவு மதிமுகவினர், கட்சி அலுவலகத்தில் இருந்து செவந்தியப்பன் உள்ளிட்டோர் வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்ப்புக்கு விளக்கம்

எதிர்ப்புக்கு விளக்கம்

இதன் காரணமாக அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்கவும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இது குறித்து மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டதற்கு, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து, தனியார் தொலைக்காட்சி துரைவைகோ விளக்கம் அளித்துள்ளார்.

திடீர் குற்றச்சாட்டு

திடீர் குற்றச்சாட்டு

சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், காழ்ப்புணர்வோடு செயல்படுவதாகவும் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் செவந்தியப்பன், தொடர்ந்து கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். கட்சியின் சட்ட விதிப்படிதான் தலைமை கழக செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது என்றார்.

கட்சி நிர்வாகிகளின் ஆதரவு

கட்சி நிர்வாகிகளின் ஆதரவு

கட்சி நிர்வாகிகளின் ஆதரவோடுதான் தலைமை கழக செயலாளராக தான் தேர்வாகியுள்ளதாகவும் தெரிவித்த துரை வைகோ, தனது தேர்வு தொடர்பாக அதிருப்தி இருந்தால் மதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதனை தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டார். மேலும் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், காழ்ப்புணர்வோடு செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+