சட்டசபையில் துரைமுருகன் அதிரடி தீர்மானம்.. ஆளுநர் ரவி சொன்ன வார்த்தைகள் முற்றிலும் நீக்கம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் அரசு எழுதிக்கொடுத்த உரையை ஆளுநர் ரவி முற்றிலும் புறக்கணித்து விட்டு வெளியேறினார். அவரது உரையை சட்டசபையில் பதிவு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ரவி பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு.
சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. உரையை வாசிக்க தலைமைச் செயலகத்திற்கு வந்த ஆளுநர் ரவியை, சபாநாயகர் அப்பாவு, துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். பின்னர் அவர், "சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்க உரையை இந்த அவையில் நிகழ்த்துவதை எனக்குக் கிடைத்த கவுரவமாக எடுத்துக் கொள்கிறேன். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புது வருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கட்டும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த அரசின் நோக்கங்களை காலத்தை வென்ற திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிட்டு எனது உரையைத் தொடங்குகிறேன். "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு.
நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும், அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும். அரசின் இந்த உரையில் பல பத்திகள் உள்ளன.
உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் இந்த உரையுடன் நான் உடன்படவில்லை. எனவே, இந்த அவையில் மக்களுக்கு நன்மை பயக்கும் விவாதங்கள் நடக்க வேண்டும் எனக் கூறி எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், நன்றி என்று கூறி தனது உரையை முடித்தார்.
தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டினார். உரையில் உள்ள பல அம்சங்களை ஏற்கவில்லை என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார்.
ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். உரையை படிக்காதபோதும் சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அமர்ந்திருந்தார். ஆளுநர் வாசிக்க மறுத்த உரையை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்து நிறைவு செய்தார்.
இதனையடுத்து சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். அதை அனைவரும் ஏற்றுக்கொண்ட உடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ரவி புறக்கணித்த உரை சட்டசபையில் பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஆளுநர் பேசிய சில வார்த்தைகள் உரையில் இல்லாத சில வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
அவையில் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ரவி அதற்கு முன்னரே அவையிலிருந்து கிளம்பி சென்று விட்டார். கடந்த ஆண்டும் ஆளுநர் உரையின் போது சில வார்த்தைகளை சட்டசபையில் சொல்லாமல் புறக்கணித்தார் ஆளுநர். இந்த ஆண்டு முழுவதுமாகவே அரசின் முழு உரையையும் புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications