"அன்புமணி கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாதவர் என்று நிரூபித்துள்ளார்" - அமைச்சர் துரைமுருகன் பதிலடி
சென்னை: "அன்புமணி கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாதவர் என்று நிரூபித்திருக்கிறார்" என ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.
பாமக தலைவர் அன்புமணி, தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என தமிழ்நாடு முழுக்க நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வேலூர் மாவட்டத்திற்குச் சென்ற அன்புமணி, அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில், "இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரை நான் கேட்கிறேன். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?" என தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், அன்புமணிக்கு அமைச்சர் துரைமுருகன் ஆதாரங்களோடு பதில் கொடுத்துள்ளார்.

துரைமுருகன் பதிலடி
இதற்குப் பதில் அளித்துள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "அன்புமணி, கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்குக் கொஞ்ச நஞ்ச விவரம் கூடத் தெரியாது என்று நிரூபித்திருக்கிறார்" எனத் தெரிவித்து, பாலாற்றில் எங்கெங்கு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன், "பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த அன்புமணி, தன்னுடைய தந்தையான டாக்டர் அய்யாவை எதிர்த்து ரத கஜ துரக பதாதிகளுடன் தமிழகத்தில் திக்விஜயம் செய்யப் புறப்பட்டிருக்கிறார். இதுகுறித்து கருத்து சொல்ல நமக்கு உரிமையில்லை; நாம் சொல்லப் போவதுமில்லை. ஆனால், இந்த திக்விஜயத்தில் நேற்று வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் போர்ப் பிரகடனம் செய்திருக்கிறார்.
அன்புமணி விவரமானவர் என நினைத்திருந்தேன்
அவர் பேசுகிறபோது, என்மீது ஒரு சிறிய பாசமழையைப் பொழிந்துவிட்டு, அதே வேகத்தில் நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளைக் குறித்து விவரம் தெரியாமல் என்னுடைய அமைச்சர் பணியைக் குறித்துக் கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார்.
அதாவது, "இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரை நான் கேட்கிறேன். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?" என்று முழக்கமிட்டிருக்கிறார்.
அன்புமணி, கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்குக் கொஞ்ச நஞ்ச விவரம் கூடத் தெரியாது என்று நிரூபித்திருக்கிறார்.
ஆதாரத்துடன் சொன்ன துரைமுருகன்
கலைஞர், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போதுதான் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகின்ற பணியை ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக, நான் இந்த துறைக்கு அமைச்சராக, கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டத்திலும், மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிற இந்த காலத்திலும், பாலாற்றில், இறையங்காடு, பொய்கை, சேண்பாக்கம், அரும்பருத்தி, திருப்பாற்கடல், கவுண்டன்யாநதியில், ஜங்காலப்பள்ளி, செதுக்கரை, பொன்னையாற்றில், பரமசாத்து- பொன்னை குகையநல்லூர், பாம்பாற்றில், மட்றப்பள்ளி, ஜோன்றாம்பள்ளி, கொசஸ்தலையாற்றில், கரியகூடல், அகரம் ஆற்றில், கோவிந்தப்பாடி, மலட்டாற்றில், நரியம்பட்டு, வெள்ளக்கல் கானாற்றில், பெரியாங்குப்பம், கன்னாற்றில், சின்னவேப்பம்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கிறேன்.
இந்த ஆண்டு, அம்பலூர், பாப்பனபள்ளி-செங்குனிகுப்பம், அம்முண்டி, வெப்பாலை ஆகிய இடங்களில் தடுப்பணைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அன்புமணிக்கு ஒரு சிறிய வேண்டுகோள். இனிமேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது" எனத் தெரிவித்துள்ளார்.
-
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? முதல்வர் விஜய் முடிவுக்கு அன்புமணி வரவேற்பு -
நடக்காததை நடத்தி காட்டிய பாமக..அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்த்த அன்புமணி! அரசியலில் அரிதான நிகழ்வு -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications