நான் உட்பட யாராக இருந்தாலும் சரி.. நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்தால் அவ்வளவுதான் -துரைமுருகன்
சென்னை: நான் உட்பட யாராக இருந்தாலும் சரி நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்தால் தண்ணீருக்கு கோபம் வந்துவிடும் என மூத்த அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்படும் தண்ணீரை ஆய்வு செய்யச்சென்றவர் அங்கே செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். மேலும், சென்னைக்கு புறநகரில் ராமஞ்சேரி என்ற இடத்தில் புதிய ஏரியை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நேற்றிரவு கூட முதலமைச்சர் ஸ்டாலினிடம் இது குறித்து தாம் பேசியதாகவும் கூறினார். தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என்பதற்காக புவியியல் அமைப்பு இல்லாமல் நினைத்த இடத்தில் புதிய ஏரியை உருவாக்க முடியாது என்றார்.

இந்த ஆண்டு சென்னையில் பெய்த மழையை போல் வேறு எந்த ஆண்டுமே தாம் பார்த்ததில்லை என்றும் வரலாறு காணாத புயலில் தாக்கம் இது என்றும் அவர் தெரிவித்தார். நீர் நிலைகளை ஆக்கிரமித்தோ, அல்லது நீர் வழிப்பாதைகளுக்கு குறுக்கீடு ஏற்படும் வகையிலோ வீடுகள் கட்டினால் தண்ணீருக்கு கோபம் வந்து அது வீட்டுக்குள் வருவதாக தெரிவித்தார். இதனால் எந்தக் காரணத்தை கொண்டும் நீர்வழிப்பாதையை குறுக்கிடும் வேலையை யாரும் செய்யக்கூடாது என்றார்.
வெள்ள நிவாரணப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும் சீரமைப்பு பணிகள் முடிந்து சென்னை இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அவர் நம்பிக்கை அளித்தார்.
அடையாற்றில் முறையாக தூர்வாரி சீரமைத்து வைத்ததால் கடந்த ஆண்டுகளை போல் அதிலிருந்து தண்ணீர் சாலைகளுக்கு வரவில்லை என்றும் இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே அமைச்சர் துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்யச் சென்ற போது தனது பேரன், பேத்தியையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். இது தான் ஏன் என அங்கிருந்த அதிகாரிகளுக்கே புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications