அதிர்ந்த செந்தில் பாலாஜி.. துஷார் மேத்தா சொன்ன அந்த வார்த்தை.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய பரபரப்பு
சென்னை: கைது செய்து வைத்துள்ள ஒருவர் காவலில் இருந்து தப்பித்து தலைமறைவாகிவிட்டு 15 நாட்கள் கழித்து வந்து தனக்கான காவல் முடிந்துவிட்டதால் இனி காவலில் எடுத்து விசாரிக்க கூடாது என சொல்ல முடியுமா , அது போல்தான் செந்தில்பாலாஜி விவகாரமும் உள்ளது என அமலாக்கத் துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் இருந்த போது அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது திமுகவில் இணைந்து மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14 ஆம் தேதி அவரை கைது செய்தது.
இந்த கைது சட்டவிரோதமானது என்றும் எதற்காக கைது செய்கிறோம் என சம்பந்தப்பட்டவரிடமோ அவருடைய குடும்பத்தினரிடமோ கூறவில்லை என கூறி மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம் அல்ல என தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு விசாரணையில் முகுல் ரோத்தகி நேற்றைய தினம் வாதம் செய்த போது அவர் கூறுகையில் 5 நாட்களுக்கு மேல் அமலாக்கத் துறைக்கு போலீஸ் காவல் கோர உரிமை இல்லை. செந்தில் பாலாஜியின் உடல் நிலை தற்போது தேறி வருவதால் அவரிடம் ஒரு நாளில் சிறிது நேரம் விசாரிக்கலாம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்து மறுநாள் காவல் கோருகிறார்கள். செந்தில் பாலாஜி வெளிநாட்டுக்கு பறந்து செல்லக் கூடியவர் அல்ல. செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை. சட்டத்தை மாற்றி அமைக்க நீதிமன்றத்தில் அதிகாரமில்லை என வாதம் செய்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் அமலாக்கத் துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார். அப்போது அவர் செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பெற முயற்சித்த போது அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதனால் அவரை கைது செய்தோம். நாங்கள் கைது செய்த ஒருவர் காவலில் இருந்து தப்பி தலைமறைவாகி விட்டு 15 நாட்கள் கழித்து வந்து எனக்கு வழங்கப்பட்ட 15 நாட்கள் காவல் முடிந்துவிட்டது.
இனி காவலில் எடுத்து விசாரிக்க கூடாதென சொல்ல முடியுமா, அது போல்தான் செந்தில் பாலாஜி விவகாரத்தை கருத வேண்டும். செந்தில் பாலாஜி மருத்துவமனை மற்றும் நீதிமன்றக் காவலில் உள்ள நாட்களை அமலாக்கத் துறைக்கான விசாரணை காலமாக கருதக் கூடாது.
அப்படி கருதினால் செந்தில் பாலாஜி சட்டத்தை உடைக்க நாம் அனுமதிக்கிறோம் என்பது பொருளாகிறது. உடல் ரீதியாக ஒருவரை முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் நீதிமன்றக் காவல். மாறாக மருத்துவமனையிலோ அல்லது சிறையிலோ வைத்திருப்பது நீதிமன்றக் காவலாக எப்படி இருக்கும் என அமலாக்கத் துறை வாதம் நிறைவடைந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications