சென்னை முகப்பேர் அமிர்தவர்ஷினி குடியிருப்பில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம்
சென்னை: முகப்பேர் மேற்கில் உள்ள அமிர்தவர்ஷினி குடியிருப்பில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முகப்பேர் மேற்கில் உள்ளது அமிர்தவர்ஷினி அடுக்ககம். இங்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என 4 பிளாக்குகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 30 வீடுகள் வீதம் மொத்தம் 120 வீடுகள் உள்ளன. குடியிருப்பு முழுவதும் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது.
இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உடற்பயிற்சி உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புச் சங்கம் பொங்கல், தீபாவளி, தசரா, ரம்ஜான், கிறிஸ்துமஸ், தமிழ், ஆங்கில புத்தாண்டு ஆகியவற்றை கொண்டாடி வருகிறது.

குழந்தைகளுக்கு இனிப்பு
குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழாக்களின் போதும் குடியிருப்பில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக குழந்தைகள், பெரியோர் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகளும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

கொலு பொம்மைகள்
கடந்த அமாவாசை நாளன்று பொம்மை கொலு வைக்கும் வைபவம் தொடங்கப்பட்டது. இதன்படி அமிர்தவர்ஷினி அடுக்ககத்திலும் சில வீடுகளில் பொம்மை கொலு காட்சிப்படுத்தப்பட்டன. கொலு வைக்கப்பட்ட வீடுகளில் குழந்தைகள் பாட்டு பாடினர்.

குடியிருப்பில் ஆயுத பூஜை
குடியிருப்பு சங்கம் சார்பில் நேற்றைய தினம் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சங்க அலுவலகத்தில் பூஜை செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் கவனித்துக் கொண்டனர்.

கேரள மக்களுக்கு உதவிக்கரம்
குடியிருப்பு நலச் சங்கம் வெறும் விழாக்களை நடத்துவதோடு சுகாதாரத்தை பேணி காப்பதிலும் உதவிக்கரம் நீட்டுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த மாதம் கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்த போது குடியிருப்பு சார்பாக நலத்திட்ட உதவிகள் திரட்டப்பட்டு உரிய இடத்தில் ஒப்படைக்கப்பட்டன. பாதாள சாக்கடை திட்டத்தை துரிதப்படுத்தவும் இச்சங்கம் வலியுறுத்தி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications