கூண்டோடு சிக்கும் அதிகாரிகள்.. பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி மீது வழக்குப்பதிவு.. வளையத்தில் சிவக்குமார்!
சென்னை : முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பத்திரவுப் பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி சீனிவாசன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மோசடி பத்திரங்களை பதிவு செய்ய துணை போனதாக, பதிவுத் துறை கூடுதல் ஐ.ஜி கே.வி.சீனிவாசன் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பொதுமக்களிடம் பிஏசிஎல் நிறுவனம் பெற்ற ரூ.49,000 கோடி முதலீடுகள் 2013ல் உச்சநீதிமன்ற குழுவால் முடக்கப்பட்டது. உச்சநீதிமன்ற குழுவால் முடக்கப்பட்ட பிஏசிஎல் சொத்துகளை முறைகேடாக விற்க உதவிய புகாரில் கடந்த வாரம் சீனிவாசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கூடுதல் ஐ.ஜி சீனிவாசன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், பல்வேறு முக்கிய அதிகாரிகள் மீதும் புகார் சுமத்தப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
பதிவுத் துறையில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த மோசடிகள் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறைகேடுகள் தொடர்பாக சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வந்தனர். இதில், தவறான வழிகாட்டுதல்கள் வழங்கி மோசடிக்கு துணைபோன கூடுதல் ஐ.ஜிக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

பிஏசிஎல் விவகாரம்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த பி.ஏ.சி.எல் நிறுவனம் கடந்த 2013ல் மோசடி புகாரில் முடக்கப்பட்டது. இந்த நிறுவன சொத்துக்களை நிர்வகிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி லோதா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டியின் பெயரை தவறாக பயன்படுத்தி, தமிழகத்தில், 6,892 ஏக்கர் நிலங்கள் மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 714 மோசடி பத்திரங்கள் பதிவு செய்ததாக, 63 சார் பதிவாளர்கள் சிக்கினர்.

பரந்தூர் விமான நிலையம்
இதில், ஒன்பது பேர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், 54 பேர் மீதான புகார்கள் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் தவறான அறிவுரைகள் வழங்கி, ���ோசடிக்கு துணை போனதாக, கூடுதல் ஐ.ஜி சீனிவாசன் மீது புகார் எழுந்தது. இது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், புதிய விமான நிலையம் அமைய உள்ளது. பரந்துாரில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் நோக்கில், வழிகாட்டி மதிப்புகளுக்கு மாறாக, சில பத்திரங்கள் கூடுதல் மதிப்பை குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் ஐ.ஜி சஸ்பெண்ட்
இதில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதிலும் மோசடிக்கு துணையாகச் செயல்பட்டதாக, கூடுதல் ஐ.ஜி சீனிவாசன் மீது புகார் எழுந்தது. இந்த புகாரையும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தது. இரு புகார்கள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை அடிப்படையில், கூடுதல் ஐ.ஜி சீனிவாசன் கடந்த 20ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் இன்று ஓய்வு பெற இருந்தார்.

வழக்குப்பதிவு
இந்நிலையில், முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி சீனிவாசன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நெல்லை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 609.22 ஏக்கர் நிலங்களை விற்க கூடுதல் ஐ.ஜி சீனிவாசன் முறைகேடாக அனுமதி அளித்ததாகவும் இதன்மூலம், சீனிவாசன் ரூ.300 கோடி ஆதாயம் அடைந்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

சிக்கிய அதிகாரிகள்
முடக்கப்பட்ட சொத்துகளை விற்க பிஏசிஎல் நிறுவனத்துக்கு பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் ரவீந்திரநாத், கீதா ஆகியோர் முகவர்களாக செயல்பட்டதாகவும், சீனிவாசன் ஈடுபட்ட முறைகேடுகளில் வணிக வரித்துறை பதிவுத்துறை அலுவலக பிரிவு அலுவலரான சிவக்குமார் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.

சிவக்குமார் கட்டுப்பாட்டில்
பத்திரப்பதிவு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உள்பட துறையின் உயர் அதிகாரிகள் பலரும் சிவக்குமார் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டுள்ளது. பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி சீனிவாசன் முறைகேடுகளை பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி சிவன் அருள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

கூண்டோடு நடவடிக்கை
பதிவுத்துறை முன்னாள் அமைச்சருடன் தனக்கு இருந்த தொடர்பை பயன்படுத்தி சிவகுமார் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறு செய்த அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications