முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் வீடுகளில்.. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறார்கள். மொத்தம் 4 இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று ரெய்டு நடத்தப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு புறம்பாக 27 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக இந்த வழக்கு பதியப்பட்டு உள்ளது. அதோடு விஜயபாஸ்கர் மனைவி ரம்யா மீதும் இதில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சோதனை

சோதனை

இந்த சோதனையை தொடர்ந்து தன்னுடைய வீட்டில் இருந்து பணம், நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார். விஜயபாஸ்கரின் சொத்து கணக்கு விவரங்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது. தனக்கு 51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக சொத்து கணக்கு காட்டி இருக்கிறார். ஆனால்கணக்குபடி அவர் செலவு போக 24 கோடி ரூபாய்க்கு மட்டும்தான் சொத்துக்கள் வாங்கி இருக்க முடியும்.

ரெய்டு

ரெய்டு

இதனால் மீதமுள்ள 27 கோடி ரூபாய் சொத்து எப்படி வாங்கப்பட்டது என்று இந்த எப்ஐஆரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முறைகேடாக வந்த பணம் மூலம் இவர் பல கல்வி நிறுவனங்கள் பினாமி பெயரில் தொடங்கியதாகவும், பல்வேறு சொத்துக்கள் வாங்கி முதலீடு செய்ததாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு கைப்பற்றல்

எவ்வளவு கைப்பற்றல்

லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், இவரின் வீட்டில் பணம் - 23,85,700 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. தங்க நகைகள் -4870 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது. கனகர வாகனங்கள் -136 வாகன பதிவு சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. வழக்கிற்கு தொடர்புடைய பணம் - 23,82,700 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

Recommended Video

    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. சட்டப்படி எதிர்கொள்வேன்.. சவால்விட்ட விஜயபாஸ்கர்
    உதவியாளர்கள்

    உதவியாளர்கள்

    இந்த நிலையில்தான் இன்று காலை விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறார்கள். உதவியாளர்கள் சரவணன், முருகன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    4 இடங்கள்

    4 இடங்கள்

    சேலத்தில் விஜயபாஸ்கருடன் தொடர்புடைய மருத்துவர் செல்வராஜ் என்பவரின் மருத்துவமனையிலும் சோதனை நடைபெறுகிறது. உதவியாளர் சரவணனின் சென்னை நந்தனம் வீட்டிலும், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சாசன் டெவலப்பர்ஸ் நிறுவத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. விஜயபாஸ்கருடன் இவர்கள் நெருக்கமாக இருந்த காரணத்தால் இந்த ரெய்டு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+