எஸ்.பி வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிவு.. டெண்டர் முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் அன்றைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ரூபாய் 26.61 கோடி முறைகேடு செய்ததாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.

மழைநீர் வடிகால், சாலைப் பணிகளுக்கான டெண்டர்களை முறைகேடாக முடிவு செய்ததன் மூலம், அன்றைய நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.

மழைநீர் வடிகால் அமைக்க 290 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சாலைகள் அமைப்பதற்காக 246 கோடி ரூபாயிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் ஒப்பந்தாரர்களை முடிவு செய்வதில் விதிமீறல் நடந்துள்ளதாகவும், எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும், அதன் மூலம் 26.61 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்தனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் எஸ்.பி வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி சேர்ந்த 10 பொறியாளர்கள் மீது ரூ. 26.61 கோடி முறைகேடு செய்ததாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி செயற்பொறியாளர் முருகன், கண்காணிப்பு பொறியாளர் சின்னச்சாமி, செயற்பொறியாளர்கள் சரவணமூர்த்தி, பெரியசாமி, சின்னதுரை, நாச்சன், முன்னாள் செயற்பொறியாளர் சுகுமார், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், தலைமை பொறியாளர் நந்தகுமார், முதன்மை பொறியாளர் புகழேந்தி உள்ளிட்டோர் மீது ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ்












Click it and Unblock the Notifications