4 தொகுதி இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்
வாரணாசியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை: தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை எல்லாம் பற்றி கவலைப்படாமல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வாரணாசி சென்றுள்ளார்.
எம்பி தேர்தல் முடிந்தாயிற்று.. 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் முடிவை வைத்துதான் அதிமுக ஆட்சி தொடருமா, கவிழுமா என்று தெரியவரும்.
அந்த அளவுக்கு எடப்பாடி அரசுக்கு நெருக்கடியும், நிர்ப்பந்தமும் உள்ளது. இந்தஆட்சியை கவிழ்க்க திமுக மிக மிக தீவிரம் காட்டி வருகிறது.

சிக்கல்
நடக்க போகும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டார்கள். ஒரு தொகுதியின் வெற்றி மிஸ் ஆனால்கூட சிக்கல்தான்! அதனால் இடைத்தேர்தல் சம்பந்தமான வேலைகள் இப்போதே ஆரம்பிக்க வேண்டிய நிலை உள்ளது.

பிரார்த்தனை
மற்றொரு பக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 4 வேட்பாளர்களால் தொகுதிகளில் உள்கட்சி பூசலும் எழுந்து வருகிறது. இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்றிருக்கிறார். ஏதோ பிரார்த்தனைக்காக அங்கு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

யூகங்கள்
இது சம்பந்தமான சில போட்டோக்களும் மீடியாவில் வெளிவந்துள்ளன. இந்த நேரத்தில் ஓபிஎஸ் எதற்காக வாரணாசி செல்ல வேண்டும், என்ன காரணம் என்று தெரியாமல் பல தரப்பினர் மண்டை காய்ந்துள்ளனர். தவிரவும் இது சம்பந்தமாக, சில சலசலப்புகளும், யூகங்களும் எழுந்து வருகின்றன.

கற்பனை குதிரைகள்
ஓபிஎஸ்-க்கு 4 இடைத்தேர்தல் பற்றி கவலை இல்லையா? இப்போது வாரணாசி பயணம் தேவையா? மகன் வெற்றி பெற வேண்டும் என்று ஏதாவது விசேஷ பூஜை செய்ய போயிருக்கிறாரா? அப்படியானால் மற்ற அதிமுக வேட்பாளர்கள் பற்றி கவலை இல்லையா? அல்லது வாரணாசியில் சென்று பூஜை செய்ய பாஜக தரப்பினரின் கவனத்தை இழுக்க முயல்கிறாரா? என்றெல்லாம் ஆளுக்கு ஒரு பக்கம் கற்பனை குதிரைகளை தட்டி விட்டு வருகின்றனர்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications