மின்கட்டண ரசீது.. உரிமைத்தொகையை பெற கரண்ட் பில் ரசீது அவசியமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்படி மாதம் ஆயிரம் ரூபாய் பெற மின் கட்டண ரசீது கட்டாயமா என்பது குறித்து கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெகநாதன் பதில் அளித்துள்ளார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில், நேற்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பேசியபோது, சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.. குறிப்பாக, "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை அவர்களது வீடுகளிலே கொண்டு சேர்க்கும் பணியினை முதற்கட்டமாக வழங்கியுள்ளார்கள். அதை இரண்டு பிரிவுகளாக, முதற்கட்டமாக வருகின்ற 24ம் தேதி முதல் முகாம்கள் தொடங்க இருக்கிறது.
2 கட்ட முகாம்கள்: இதில் ஜூலை 23-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள 2.24 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விண்ணப்பம் வழங்கப்படும். ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை முதற்கட்ட முகாமும், ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்பட உள்ளது.
முகாம்களில் வங்கிக் கணக்கு துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21 லட்சம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஒரு லட்சம் பேர் கூட்டுறவு வங்கியில் புதிய கணக்குகள் துவங்கியுள்ளனர். மேலும் 15 லட்சம் பேர் கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
துரித நடவடிக்கைகள்: மேலும், இப்பணிகளை கண்காணிக்க மூன்று மாவட்டங்களுக்கு ஒரு கூடுதல் பதிவாளர் என அனைத்து மாவட்டங்களுக்கும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தினை மக்களிடத்திலே முழுவதுமாக கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம் அனைத்து இடங்களிலும் குறிப்பாக மலைப்பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும் தாமதமின்றி விண்ணப்பங்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கூறியிருந்தார்.
இதனிடையே, உரிமைத்தொகை பெறுவதற்கு, மின் கட்டண ரசீது அவசியமா? என்ற மிகப்பெரிய சந்தேகம் வட்டமடிக்க ஆரம்பித்தது.. இதற்குதான் தற்போது, கூட்டுறவுத்துறை அதிகாரி விளக்கம் ஒன்றை தந்திருக்கிறார்.
மின்கட்டண ரசீது: தமிழ்நாடு கூட்டுறவு துறை செயலாளர் ஜெகநாதன் இதுகுறித்து சொல்லும்போது, "முகாமிற்கு தேவையான பயோமெட்ரிக் கருவிகள், செல்போன் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் இருக்கின்றன.. இந்த திட்டம் தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் மின் கட்டண ரசீது கேட்கப்பட்டிருந்தது.
விளக்கம்: ஆனால், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தில் மின் இணைப்பு எண்ணை மட்டும் பூர்த்தி செய்தால் போதுமானது.. மின் கட்டண ரசீது தேவையில்லை... முகாமில் விண்ணப்பிக்கும்போது கைரேகை பதிவு செய்ய முடியவில்லை என்றும் பயம் எதுவும் தேவையில்லை.. இதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்றார். கூட்டுறவுத்துறை அதிகாரியின் இந்த விளக்கத்தினால், பொதுமக்கள் தரப்பு நிம்மதி அடைந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications