இபி பில் போன மாசம் எகிறிடுச்சா? குறைந்தது மின்தேவை.. கோடை மழையில் மின்சார வாரியம் தந்த ஜில் தகவல்
சென்னை: தமிழகம் முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகம் செய்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடை மழை கொட்டி வரும் நிலையில், மின்வாரிய அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.. இது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.
தமிழகத்தின் மின்தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, கோடை வெயில், கோடை மழை காரணமாக மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்துறை அமைச்சர் ஏற்கனவே துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

மின் தடைகள் - மின் பழுதுகள்
அதுமட்டுமலல, அடிக்கடி மின் தடை ஏற்படும் பகுதிகளை சம்பந்தப்பட்ட பொறியாளா்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, அதற்கான காரணங்களையும் கண்டறிந்து சரிசெய்ய உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில், மீண்டும் ஒரு நம்பிக்கை தகவலை அதிகாரிகள் பொதுமக்களுக்காக தந்துள்ளனர்.. அது என்ன தெரியுமா? இந்த வருடம் மாா்ச் மாதமே வெயிலின் தாக்கம் அதிகமாகிவிட்டது.. இதனால், மின்சாதன பொருள்களின் பயன்பாடும் அதிகமானது.. ஏராளமானோர் ஏசி-யை வாங்கும் நிலைமைக்கும் ஆளானார்கள்..
பகல் முழுவதும் ஃபேன்
பகல் முழுவதும் ஃபேன் ஓடிக்கொண்டேயிருக்கும் நிலைமையும் ஏற்பட்டது. எனவே, மின் தேவை 22,000 மெகா வாட்டை தாண்டும் என்று கணிக்கப்பட்டது. எனவே, இந்த மின்தேவையை பூர்த்தி செய்ய ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலாக 6,000 மெகாவாட் மின்சாரம் தனியாா் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்று ரூ.9-க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கோடை மழை
எதிர்பார்த்தபடியே, தினசரி மின்தேவையானது கடந்த மாதம் முதல் 20,000 மெகாவாட்டாக உயா்ந்தது. மின் தேவையை மின்வாரியம் முறையாகக் கையாண்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தது.. இதில் கடந்த வாரத்தில் சென்னையிலும் நல்ல மழை பெய்தது. இதனால், தினசரி மின்தேவை 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்தது.
அதிகாரிகள் நம்பிக்கை
இப்போது சென்னை மட்டுமல்லாமல், வேற சில மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து கொண்டிருக்கிறது.. பல இடங்களில் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.. இதனால், தினசரி மின்தேவையானது, 17,000 முதல் 18,000 மெகாவாட்டாக குறைந்துள்ளது..
தமிழ்நாடு முழுவதுமே கிளைமேட் மெல்ல மாறிவருவதால், தினசரி மின்தேவை இனிமேல் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும், இதனால் மாநிலம் முழுவதுமே தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அப்படியே அதிகரித்தாலும் காற்றாலை மின்சாரம் கிடைத்து விடும் என்பதால், மின்தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் உறுதி தந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications