முடங்கியது தேர்தல் ஆணைய இணையதளம்.. ஒரே நேரத்தில் திமுதிமுவென குவிந்து திணறவிட்ட வாக்காளர்கள்!
சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கம் முடங்கியது. வாக்காளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்க அணுகியதால் தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கம் தற்காலிகமாக முடங்கியது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக. வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள். கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். தமிழகத்தில் மொத்தம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்குவதற்கு முன் அக்டோபர் 27 அன்று இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 6,41,14,587. இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5,43,76,755. அதில் பெண் வாக்காளர்கள் 2,77,06,332; ஆண் வாக்காளர்கள் 2,66,63,233, மாற்று பாலினத்தவர்கள் 7,191; மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 4,19,355.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் படிவம் 6 அல்லது படிவம் 8 மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை அணுகலாம். இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையம் நடத்தவுள்ள சிறப்பு முகாம்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதன் விவரம் இறுதி வாக்காளர் பட்டியலில் தெரியவரும். இன்று வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியல், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலின் பெயர் இடம் பெறாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் படிவம் 6, 7, 8 மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், ஏராளமான வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தை அணுகி, தங்கள் பெயர் புதிய வரைவு பட்டியலில் உள்ளதா என சோதிக்க முயன்றனர்.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கத்தை அணுகிய நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கம் தற்போது முடங்கி உள்ளது. இதனால் வாக்காளர்கள் விவரங்களை அறிந்து கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
-
கழகங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய சுயேச்சைகள்! 2021 சட்டமன்ற தேர்தல்.. டாப் 10 இவுங்கதான்.. ரிவைண்ட் -
சம்பளத்துடன் விடுமுறை கட்டாயம்.. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications