புதிய பென்ஷன் திட்டம்.. மத்திய அரசு ஊழியர்களில் யாருக்கு எவ்வளவு லாபம்.. பொருளாதார நிபுணர் விளக்கம்
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு நாடு முழுவதும் அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் 1-ந்தேதி அமலுக்கு வரவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) குறித்து பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி தனது எக்ஸ் தள பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில் எப்படி ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது. இந்த புதிய திட்டத்தால் யாருக்கு எவ்வளவு லாபம், ஓய்வு பெறும் போது என்ன கிடைக்கும் என விளக்கி உள்ளார்.
பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "கடந்த வாரம், மத்திய அரசு, தனது ஊழியர்களுக்காக ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் (UPS) ஐ அறிமுகம் செய்தது நினைவிருக்கலாம். 2004 ஆம் வருடத்தில் இருந்து NPS திட்டத்தில் முதலீடு செய்தவர்கள், இந்த திட்டத்தில் சேருவதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சில முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

யார் பயனாளிகள்: இந்த திட்டத்தின் மூலம், ஓய்வுபெற்ற ஒவ்வொரு மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஒரு நிலையான பென்ஷன் தொகை, மாதா மாதம், ஓய்வூதியமாக வழங்கப்படும்.
எப்பொழுது அமலுக்கு வருகிறது: இந்த திட்டம், ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது.
எப்படி கணக்கிடப் படுகிறது: நீங்கள் 25 வருடங்களுக்கு மேல், மத்திய அரசு ஊழியராக இருந்தால் மட்டுமே, கடைசி வருடத்தில் நீங்கள் வாங்கிய சம்பளத்தில் (Basic+DA : average pay for the preceding 12 months), 50% மாதாந்திர பென்ஷன் ஆக வழங்கப்படும். 25 வருடங்களுக்கு கீழ் வேலை செய்தவர்களுக்கு, pro-rata basis கணக்கீட்டில், பென்ஷன் வழங்கப்படும். உதாரணமாக, 10 வருடம் சர்வீஸ் முடித்து ஓய்வு பெற்றால், ₹10,000 மட்டுமே பென்ஷன் கிடைக்கும்.
உங்களுடைய contribution எவ்வளவு: உங்களுடைய contribution, NPS திட்டத்தில் இருந்ததுபோல் அப்படியே இருக்கும். மாற்றமில்லை. ஆனால், மத்தியஅரசின் பங்கு, 14%ல் இருந்து 18.5% ஆக அதிகரிக்கப் படும்.
ஓய்வு பெறும்பொழுது என்ன கிடைக்கும்: வழக்கமான Gratuity தவிர, ஒவ்வொரு 6 மாத சர்வீசுக்கும், உங்களது ஊதியத்தில் (Basic + DA) 10% கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இந்த தொகைக்கும், பென்ஷன் தொகைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. இந்த தொகை எவ்வளவாக இருந்தாலும், உங்களது பென்ஷன் தொகை மாறாது.
பென்ஷன் தொகை பணவீக்கத்திற்கு ஏற்றவாறு அதிகரிக்கப் படுமா: ஆமாம். மத்தியஅரசின் ஊதியக் கொள்கைகளுக்கேற்ப, All India Consumer Price Index for Industrial Workers (AICPI-IW) ஐ சார்ந்து, அதற்கேற்றவாறு பென்ஷன் அதிகரிக்கப் படும்.
ஓய்வூதியம் வாங்குபவர் இறந்துவிட்டால்: அவர் வாங்கிய மாதாந்திர பென்ஷனில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
யார் செலவு செய்வது: பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்தும் வரியில் இருந்துதான் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப் படும். அதே போல் தான் இதுவும். அனைத்தும், நம்முடைய வரிப்பணம் தான். Actuarial Cost Method முறைப்படி, ஒவ்வொரு வருடமும் எவ்வளவு தேவை என்று, கணக்கிடப் பட்டு, அதற்கேற்றார் போல், வருடாந்திர நிதிநிலை அறிக்கையில், அதற்க்கான ஒதுக்கீடு இருக்கும்.
ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு: அவர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப் பட்டு, பென்ஷன் வழங்கப்படும். கடந்துபோன வருடங்களுக்கான arrears, PPF வட்டி சேர்த்து
NPS --> UPS --> NPS மாறலாமா: ஒரு முறை NPS ல் இருந்து UPS க்கு மாறிவிட்டால், திரும்ப NPS க்கு போக முடியாது. அவ்வளவுதான்.

UPS திட்டம் பென்ஷன் தாரர்களுக்கு இது லாபகரமானதா: தற்போதைக்கு சந்தையில் இருக்கும் Annuity plan returns பார்க்கையில், 6% - 6.8% தான் இருக்கின்றது. உங்களது NPS தொகையை Annuity பிளான்களில் முதலீடு செய்வதை விட, UPS திட்டத்தில் சேருவது லாபகரமானதே" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications