பர்சனல் லோன், கிரெடிட் கார்டு கடன்களை ‘இவர்கள்’ யாருமே கட்ட தேவையில்லை.. சூப்பர் விஷயம்
சென்னை: பர்சனல் லோன், கிரெடிட் கார்டு போன்ற அன்-செக்யூரிட் லோன்களை வாரிசுகள் கட்ட தேவை இல்லை.. வங்கியில் இருந்து வந்து கேட்டால் தைரியமாக கட்ட முடியாது என்று சொல்லுங்கள் என பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் லோன் மற்றும், கிரெடிட் கார்டு குறித்து பார்ப்போம்.
தனிநபர் கடன் என்று அழைக்கப்படும் பர்சனல் லோன் மற்ற கடன்களை விட அதிக வட்டிவிகிதம் உள்ள கடன் ஆகும். இந்த கடன் என்பது ஒருவரின் நன்னடத்தை அடிப்படையில் தரப்படும் கடனாக உள்ளது. நல்ல சம்பளம் வாங்குவோருக்கு, அவர் வாங்கும் சம்பளத்தில் அதிக பட்சம் 40 சதவீதம் இஎம்ஐ வரும் அளவிற்கு மட்டுமே கடன் தருவதை நிறுவனங்கள் விரும்புகின்றன. அதற்கு மேல் கடன் தருவதற்கு நிறுவனங்கள் விரும்புவது இல்லை.. முதல் முறை தனிநபர் கடன் என்பது நல்ல நிறுவனம், நல்ல சம்பளம் பிளஸ் காப்பீடு மூலம் கடன் தரும் நிறுவனங்கள், ஒருவேளை கடனை கட்டாவிட்டால் லோனுக்கான பணத்தை இன்சூரன்ஸ் மூலம் ரெகவர் செய்து கொள்கின்றன.

எனினும் தனிநபர் கடனை திரும்பி செலுத்த தகுதி உடையவரா என்பதை அறிய சில தகுதிகளையும் நிர்ணயித்துள்ளன. நல்ல சம்பளம், வேலை செய்யும் நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஓராண்டாவது வேலை செய்திருக்க வேண்டும், மூன்று மாத சம்பள ஸ்லிப், வேலை செய்யும் நிறுவனம் வங்கிகளின் லிஸ்ட் பட்டியலில் உள்ளனவா என்பது போன்ற தகுதிகளை பார்க்கின்றன. வங்கிகள், பணம் திரும்ப கிடைக்கும் என்பதை உறுதி செய்தே தனிநபர் கடன் வழங்கும். அதேநேரம் ஏற்கனவே கடன் வாங்கி அந்த கடனை சிறப்பாக செலுத்தி சிபிஸ் ஸ்கோரை அருமையான பராமரிப்பவர்களுக்கு எந்த ஆவணங்களும் இன்றி, டிஜிட்டலில் சில நிமிடங்களில் கடன் தொகையை குறைந்த வட்டியில் வழங்குகின்றன.
கடனை சரியான முறையில் திரும்ப செலுத்தும் நபர்களையே வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் குறிவைக்கின்றன. அவர்களின் சிபில் ஸ்கோரை பார்த்துவிட்டே கடன் தர ஆர்வம் காட்டுகின்றன. அதேநேரம் இந்த தனிநபர் கடனை எல்லாராலும் எளிதாக வாங்கிவிடவும் முடியாது.
வங்கிகள் முன்பைவிட இப்போது மிகவும் கவனமாக இதை கையாளுகின்றன. பர்சல் லோன் எடுப்பவர்களுக்கு இன்சூரன்ஸை கட்டாயமாக்குகின்றன. ஒருவேளை கடனை கட்டாமல் விட்டால், அதற்கான தனிநபரின் பின்னால் அலையாமல், காப்பீடு நிறுவனங்கள் மூலம் வசூல் செய்து கொள்கின்றன. எனினும் மரணம், உடல் நிலை ஊனம் தரும் அளவிற்கு மோசமான பாதிப்பு, நிறுவனத்தில் வேலை இழப்பு போன்ற காரணங்களுக்கு மட்டுமே காப்பீடு நிறுவனங்கள் பணத்தை திரும்ப தருகின்றன.
கிரெடிட் கார்டை பொறுத்தவரை ஓரளவு கணிசமான சம்பளம் வாங்கும் எல்லாருக்குமே கிடைக்கும். ஆனால் அதற்கு வட்டி மிக அதிகம். கிட்டத்தட்ட கந்துவட்டி போல் தான் வட்டி இருக்கும். ஒரு மாதம் ஒழுங்காக கட்டாவிட்டால் வட்டிக்குமேல் வட்டி போடுவார்கள். கிரெடிட் கார்டில் பொருள் வாங்குபவர்கள் சரியான நேரத்தில் முழு பணத்தை திரும்ப செலுத்துவது நல்லது . இல்லாவிட்டால் மினிமம் தொகை கட்டலாம். ஆனால் வட்டி தாறுமாறாகவே இருக்கும். தனிநபர் கடன் கிடைக்காதவர்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் தங்களுக்கு வேண்டிய பொருட்களை இஎம்ஐயில் எடுக்க முடியும். அதேபோல் கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்கள் பின்னாளில் தனிநபர் கடனும் எளிதாக வாங்க முடியும்.
இதில் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் போன்றவை பாதுகாப்பற்ற கடன் ஆகும். இந்த கடன்களை யார் வாங்கினார்களோ அவர்களிடம் மட்டுமே கேட்க முடியும். அவர்களின் வாரிசுகளிடமோ, மனைவியிடமோ திரும்ப செலுத்த சொல்லி வங்கிகளால் கேட்க முடியாது. இதுபற்றி பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "உங்கள் குடும்பத்தினரோ அல்லது பெற்றோரோ வாங்கிய பர்சனல் லோனுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு.
அந்த பர்சனல் லோனை உங்கள் பெற்றோருக்கு தந்தது உங்கள் சம்பாத்தியத்தை வைத்து அல்ல.. அதேபோல் எதோ ஒரு பொருளை அடகு வைத்தோ தரவில்லை.. எனவே வங்கிகளிடம் நேராகவே நீங்கள் சொல்லாம். எங்கள் அப்பா அம்மா வாங்கிய கடனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சட்ட ரீதியாக பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லுங்கள். அந்த பர்சனல் லோனை உங்கள் தலைமேல் சட்ட ரீதியாக கட்டவே முடியாது. தைரியமாக பேசுங்கள்.. பர்சனல் லோன் என்பது யார் வாங்கினாரோ அவர் மட்டுமே அதற்கு பொறுப்பு.. வீட்டில் உள்ளவர்களிடம் வசூலிக்க நிதி நிறுவனங்களால் அல்லது வங்கிகளால் முடியாது” இவ்வாறு கூறினார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications