நிர்மலா சீதாராமன் போட்ட மத்திய பட்ஜெட்.. தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள்.. நிபுணர்கள் விளக்கம்
சென்னை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இல்லை என்றும், தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. அதேநேரம் இந்த பட்ஜெட்டால் தமிழகத்திற்கு என்ன நன்மை என்பது குறித்து சில தகவல்களை பொருளாதார நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். அதுபற்றி பார்ப்போம்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை லோக்சபா தேர்தல் வந்ததன் காரணமாக , கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3-வது முறையாக பொறுப்பேற்று உள்ளது. இதன் காரணமாக முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஆனால் இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயரை குறிப்பிட்டு மத்திய அரசு எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. தமிழ்நாடு, தமிழ் என எங்குமே இல்லை. தமிழ்நாட்டில் பிறந்தவரான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்காதது ஏமாற்றத்தை தந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதேநேரம் இந்த பட்ஜெட்டில் பா ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் வலியுறுத்தலால் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒன்றுமே இல்லையா, தமிழகத்திற்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு நிறைய நன்மை உண்டு என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அவர்கள் என்ன அடிப்படையில் நன்மை என்று கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டின் மொத்த வருமானம் ரூ.46.80 லட்சம் கோடியாகும். அதில் செலவு ரூ.48.20 லட்சம் கோடியாகும். இதில் பற்றாக்குறை என்பது ரூ,1.40 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. மத்திய அரசின் வரி வருவாயில் மிகப்பெரும் செலவு என்று பார்த்தால், வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மட்டும் ரூ,11 லட்சம் கோடி அளவுக்கு போகிறது. மீதமுள்ள தொகையில் ராணுவம் முதல் விவசாயம் வரை அனைத்து துறைகளுக்கும், மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது.
மத்திய பட்ஜெட்டில் பொதுவாக எந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி என்று அறிவிக்கப்படுவது இல்லை. அதேநேரம் மாநிலங்களுக்கு ஏதாவது சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் அது மட்டுமே தனியாக அறிவிக்கப்படும். அந்த வகையில் மத்திய அரசு எந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிதாக எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. எனினும் தமிழகத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் நன்மைகள் இல்லை. எப்படி என்று பார்ப்போம்.
வரி விகிதங்களின் படி, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் தமிழகத்திற்கான நிதி பகிர்வு 4.07 சதவீதம் ஆகும். இதன்படி 2024, 2025-ம் ஆண்டில் ரூ.50 ஆயிரத்து 873 கோடி என்று பொருளதார நிபுணர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு செல்லும் வருவாயும் பல மடங்கு அதிகரித்துள்ளதால் இந்த பகிர்வு தொகை அதிகமாக கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.
இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு துறை ரீதியாக அறிவித்த பல திட்டங்களில் தமிழகத்திற்கு நிறைய பயன்கள் உள்ளது. இந்தியாவில் சிறு, குறு, தொழில்களில் தமிழகம் தான் டாப் தான். அந்த வகையில் சிறு குறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு இம்முறை பட்ஜெட்டில் அதிக அளவில் சலுகைகளை வழங்கி உள்ளது. எனவே இதன் பலன்கள் தமிழகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விவசாய துறையின் கீழ் எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் பலன்களும் தமிழக விவசாயிகளுக்கு அதிகமாக கிடைக்கும்.
நாட்டின் செல்போன் போன்ற மின்னணு பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழ்நாடு தான். அதேபோல் ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முக்கியமானது தமிழ்நாடு. என இந்த இரண்டு துறைகளுக்கும் அரசு இம்முறை சலுகைகளை வாரி வழங்கி உள்ளதால், தமிழகத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இந்த சூழலில் அதன் தொகை ரூ,20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள மக்களுக்குஅதிக பலன் உண்டு. இதுதவிர உள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில கல்வி கடன் ரூ,10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், கல்வி கடன் பெறுவதிலும் தமிழக மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
விசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ,6 ஆயிரம் வழங்கும் கிசான் திட்டம், பயிர் காப்பீடு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ரூத் திட்டம்,
குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம், வீடுகள் கட்டும் திட்டம் போன்றவற்றின் மூலமும் தமிழக மக்களுக்கு அதிகளவில் பலன் கிடைக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
அதேநேரம் தமிழகத்திற்கு இந்த பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு தனது பங்கு தொகையை ஒதுக்கீடு செய்யவில்லை. புதிய ரயில் திட்டங்களையும் அறிவிக்கவில்லை. இதேபோல் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தவிர தாம்பரம் செங்கல்பட்டு உயர்மட்ட சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. இது பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications