வாரத்திற்கு 3 நாள்தான் வேலையா! இந்தியாவில் மட்டும் வேலை நேரம் ஏன் குறையல தெரியுமா? ஷாக் காரணம்
சென்னை: நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்போசிஸ் நாராயணன் கூறியிருந்த நிலையில், வாரத்திற்கு 3 நாட்கள் வேலை போதுமானது என பில்கேட்ஸ் பேசியிருக்கிறார். இதன் மூலம் தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன. மறுபுறம் இந்தியாவில் ஏன் வேலை நேரம் ஏன் குறையவில்லை என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்தியாவில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 9-10 மணி நேரம் வரை உழைக்கிறார்கள். ஆனாலும் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவுக்கு உயர்ந்ததை போல தெரியவில்லை. இப்படி இருக்கையில் இன்போசிஸ் நாராயணன் சொன்ன வார்த்தை தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாரத்திற்கு 70 மணிநேரம், ஒரு நாளைக்கு 11 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அப்படி உழைத்தால் உற்பத்தி அதிகரிக்கும், பொருளாதாரம் வளரும் என்பது அவருடைய கணக்கு.

நாராயணன் சொன்னதை போல வேலை நேரத்தை அதிகரித்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகரிக்குமா? இதற்கு பொருளாதார ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர். அதாவது இன்றைய சூழலில் சீனா, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி சிறப்பாக இருக்கிறது.
இந்த நாடுகளில் எந்த மாதிரியான வேலை நேரம் பின்பற்றப்படுகிறது தெரியுமா? சீனாவில் வாரத்திற்கு 46.1 மணி நேரம், அமெரிக்காவில் 36.4, தென் கொரியாவில் 37.9, இங்கிலாந்தில் 35.8, ஸ்வீடன் 35.2, சுவிட்சர்லாந்து 34.4, ஜெர்மனி 34.3, கனடா 32.1, பிரான்ஸ் 30.1 என வேலை நேரம் இருக்கிறது. இங்கு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சீனாவில் உள்ள தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 13.5 அமெரிக்க டாலர் மதிப்புள்ள உற்பத்தியை மேற்கொள்கிறார்கள். அமெரிக்கா 70.7 டாலர், ஜப்பானில் 39.6 டாலர், தென்கொரியாவில் 41.5 டாலர். ஆனால் இந்தியாவில் 11 மணி நேரம் வரை உழைத்தும் வெறும் 8.7 டாலர் உற்பத்தியை மட்டுமே கொடுக்க முடிந்துள்ளது. காரணம் வேலை நேரம்தான்.
குறைவாக வேலை நேரம் இருக்கும் போது அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே உற்பத்தி அதிகரிக்கிறது. மட்டுமல்லாது வேலை நேரத்தை குறைப்பதன் மூலம் வேலை டென்ஷன், டார்கெட், குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத சூழல், மருத்துவத்திற்கு நேரம் செலவிடமுடியாத நிலை போன்ற பிரச்னைகள் இருப்பதில்லை. தொழிலாளர்கள் ஜாலியாக வருகிறார்கள். குறிப்பிட்ட நேரத்தில் வேலையை சிறப்பாக முடித்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். இது ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.
எனவே நாராயணன் சொல்லும் வேலை நேரம் முறையானது உற்பத்தியை அதிகரிக்காது என்பது நிரூபணமாகியுள்ளது. சரி அப்போ இதற்கு என்னதான் வழி? என்கிற கேள்விக்கும் பொருளாதார ஆய்வாளர்கள் பதிலளித்துள்ளார்கள். அதாவது வேலை நேரத்தை அதிகரிப்பதை விட அறிவியல் தொழில்நுட்பங்களில் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் அந்த பதில்.
ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பிக்கும். இப்படி எந்தெந்த நாடுகள் எத்தனை விண்ணப்பங்களை தாக்கல் செய்கிறது என்பதை வைத்து ஆராய்ச்சிக்கு அந்த நாடுகள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.

உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகள் அதிகமாக காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கின்றன. அமெரிக்கா கடந்த 2022ம் ஆண்டில் 5 லட்சம் காப்புரிமை விண்ணப்பங்களை தாக்கல் செய்திருக்கிறது. சீனா 10.5 லட்சம், இதே இந்தியா வெறும் 55,718 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைக்குதான் விண்ணப்பித்திருக்கிறது. காரணம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) ஒதுக்கப்படக்கூடிய குறைவான நிதி. இந்தியா கடந்த 2020-21ம் ஆண்டில் R&Dக்கு வெறும் 0.64 சதவிகிதம் மட்டுமே நிதியை ஒதுக்கியிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகதான் நாட்டின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. அதேபோல வேலை நேரமும் குறையவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதேபோல செயற்கை நுண்ணறிவு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதை குறிப்பிட்டு, இனி வாரத்திற்கு 3 நாட்களாக வேலை நேரம் குறையும் என பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications