எத்தனை வருட ஏக்கம்.. பிரம்மாண்ட 6 வழி! நிறைவு பெறுகிறது ECR சாலை விரிவாக்கம்.. எப்போது திறக்கப்படும்
சென்னை: கோவளம் முதல் அக்கரை வரையிலான கிழக்கு கடற்கரை சாலை (ECR) 8.6 கி.மீ. நீளத்திற்கு ஆறு வழிச்சாலையாக விரிவாக்கும் பணி ஜனவரி இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தாமதங்களே இத்திட்டம் நீண்டு போனதற்கு காரணம் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தற்போது அத்தடைகள் நீக்கப்பட்டுவிட்டன.
நெடுஞ்சாலைத்துறையின் தகவல்படி, 1.2 கி.மீ. தூரத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. நில ஆவணங்களில் சில குறைபாடுகள் இருந்தன. அவை சரிசெய்யப்பட்டுவிட்டன. நில உரிமையாளர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும், என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

ECR சாலையை அகலப்படுத்தும் திட்டம்
திருவான்மியூர் முதல் அக்கரை வரை சாலையை அகலப்படுத்தும் திட்டம் 2005 ஆம் ஆண்டிலேயே ₹10 கோடி ஒதுக்கீட்டுடன் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஏராளமான சிறு சொத்துக்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் மற்றும் நில உரிமை மாற்றங்கள் போன்ற காரணங்களால் இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
2018-19 ஆம் ஆண்டில் இத்திட்டம் வேகம் பெற்றது. அப்போது முடிந்த இடங்களில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பணிகள் ஸ்தம்பித்தன. கடந்த ஆண்டுதான் மீண்டும் வேகமெடுத்தது.
ECR குடியிருப்பாளர்கள் கூறுகையில், சாலை விரிவாக்கத்தால் வாகனங்கள் வெளிப்புறப் பாதைகளில் நிறுத்தப்படுகின்றன. "நாங்கள் இன்னும் நடுவில் உள்ள இரண்டு பாதைகளில்தான் ஓட்டுகிறோம். நடுப்பகுதி கட்டுவதற்கு முன்பு வாகனங்களை முந்த முடிந்தது. ஆனால் இப்போது அது சாத்தியமில்லை, அதே மெதுவான வேகத்தில் தான் பயணிக்கிறோம். சிறந்த போக்குவரத்து ஒழுங்குமுறைதான் தேவை.
கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் நேராக இல்லாததால் சாலைகள் வளைந்துள்ளன. அவற்றோடு செல்லும் மழைநீர் வடிகால்களும் வளைந்துள்ளன என்று குறிப்பிட்டார். "இஞ்சம்பாக்கத்தில் மழைநீர் வடிகால் அருகே உள்ள மண் குவியல்களில் புற்கள் வளர்ந்துள்ளன. மேலும், புதிதாக கட்டப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் சாலையிலேயே நடக்க வேண்டியுள்ளது, என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
இது போக பக்கிங்ஹாம் கால்வாய்க்கு குறுக்கே அமைக்கப்படவுள்ள கிழக்கு கடற்கரை சாலை (ECR) - ஓல்ட் மகாபலிபுரம் சாலை (OMR) இரும்பு இணைப்புப் பாலத்திற்கான திட்ட வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய சாலை தோராயமாக 1.465 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது தோராயமாக நான்கு வழிப்பாதையாகவும், இருவழிப் போக்குவரத்து வசதி கொண்டதாகவும் அமையவுள்ளது.
தற்போது தோரைப்பாக்கம் பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் அப்பகுதி போக்குவரத்து நெரிசலைக் கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே பாலம்
பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே கட்டப்படவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ECR-OMR இணைப்புச் சாலைப் பாலத்திற்கான CRZ அனுமதிக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை விண்ணப்பித்துள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையையும் (ECR) பழைய மகாபலிபுரம் சாலையையும் (OMR) இணைக்கும் திட்டம் விரைவில் நிறைவேறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பக்கிங்ஹாம் கால்வாயின் மீது இதற்காக இரும்பு பாலம் அமைக்கப்பட உள்ளது. தொரைப்பாக்கம் (ஓஎம்ஆர்) முதல் நீலாங்கரை (ஈசிஆர்) ஆகியவற்றை இணைக்கும் இரும்புப் பாலத்தை ₹37 கோடிக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை அமைக்க உள்ளது. இதற்கான டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் திருவான்மியூரில் நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை, 36 மீட்டர் நீளமுள்ள பாலத்தில் bund மற்றும் அப்ரோச் சாலைகள் அமைக்கப்படும்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications