ஓ... இப்போ கூட்டம் குறைவா இருக்கே.. ஓட்டு போட போயிட்டு வந்துரலாம்.. சூப்பர் ஏற்பாடு!
வாக்கு சாவடியில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் புதிய வெப்சைட் ஆரம்பித்துள்ளது.
Recommended Video
சென்னை: உங்க வாக்கு சாவடியில் இப்போ எவ்ளோ கூட்டம் இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா? அதுக்கும் ஒரு சூப்பர் ஏற்பாட்டை வாக்காளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம்!
ஓட்டு போட கிளம்ப வேண்டும் என்றாலே உள்ளுக்குள் ஒரு சின்ன உதறல்தான்.. சாவடியில் எவ்ளோ கூட்டம் இருக்குமோ, எந்த அளவுக்கு கியூ இருக்குமோ, எப்போ ஓட்டு போட்டுட்டு வீட்டுக்கு திரும்பி வருவதோ என்ற எண்ணம் இருக்கும்!

இப்போ அப்படி ஒரு நினைப்பு எல்லாம் தேவையே இல்லை. அதுக்கு ஒரு ஏற்பாட்டை தேர்தல் ஆணையமே செய்துவிட்டது. முழு வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் எடுத்து வரும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

இதற்காகவே ஒரு வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பெயர் "QUEUE AT POLLING STATION". இந்த வெப்சைட்டிற்கு சென்று உங்களது வாக்காளர் எண்ணை பதிவிட்டால் போதும். உடனே உங்கள் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி, அங்கு எத்தனை பேர் உள்ளனர், கியூவில் நிற்பவர்கள் எத்தனை பேர், கூட்டம் குறைவாக உள்ளதா, அதிகமாக உள்ளதா என்பது தெரிந்துவிடும்.

உதாரணத்துக்கு பூத்தில் 30 பேர் இருக்கிறார்கள் என்றால் அந்த எண்ணிக்கையை அப்படியே உங்களுக்கு தெரிவிக்கும். இதை வைத்து நாம் சவுகரியமாக பூத்துக்கு சென்று ஓட்டு போட முடியும்.
சினிமாவுக்கு போறதுக்கு ஆன்லைன் டிக்கெட் ரிசர்வ் பண்ணுவாங்களே.. அதே மாதிரிதான்! இதனால் நேரம் மிச்சமாகிறது... சரியான திட்டமிடுதல் உள்ளது.. இதற்கு வாக்காளர்கள் நிறைய வரவேற்பினை தந்து வருகிறார்கள்!
இதுதான் அந்த இணையதள முகவரி:
http://ecapp0155.southindia.cloudapp.azure.com/polling_queue/queue.aspx


Click it and Unblock the Notifications
