ஐ.பெரியசாமி, மகன் செந்தில் குமார், மகள் வீடுகளில் நடந்த ED சோதனை.. 17 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் நடந்த ED ரெய்டு நிறவடைந்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐபி செந்தில்குமார் வீட்டில் 14 மணி நேரமாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. அதேபோல, ஐ பெரியசாமி மகள் இந்திரா வீட்டில் 17 மணி நேர அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள பழனி சட்டமன்ற உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் அவரது மகனுமான ஜ.பி. செந்தில்குமார் வீட்டிலும் அதிகாலை முதல் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ED Concludes 14-Hour Raid at Minister I Periyasamy Son Palani MLA IP Senthilkumar s House

வீட்டின் வெளியே நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்து இருந்ததால் பரபரப்பு நிலவியது. 14 மணி நேரமாக நடந்த ED சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திரா வீட்டில் 17 மணி நேர அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

சென்னை, மதுரை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல்லில் உள்ள ஐ. பெரியசாமியின் வீட்டிலும், கார்களிலும் அமைச்சரின் மகனும், பழனி எம்எல்ஏவுமான செந்தில்குமாரின் வீட்டிலும், ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஐ.பெரியசாமி வீட்டின் முன்பு குவிந்த அவரது ஆதரவாளர்கள், வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து தொண்டர்கள் கோஷமிட்டனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் மாலை 6 மணியளவில் சோதனை நிறைவடைந்த நிலையில், சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது.

இதற்கிடையே, சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் உள்ள செந்தில்குமாரின் அறையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். விடுதி பூட்டப்பட்டிருந்த நிலையில், சாவி கொண்டு வரப்பட்டு அறை திறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே எம்எல்ஏக்கள் விடுதியில், அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அறை பூட்டப்பட்டிருந்ததால் செந்தில்குமார் உதவியாளர் சந்தோஷ் வந்து அறையை திறந்த பிறகு 5 மணி நேரத்துக்குப் பின் சோதனை தொடங்கி நிறைவடைந்தது. இந்நிலையில், அமலாக்கத்துறையினர் அத்துமீறியதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006 - 2010 வரை வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 10 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் ஐ.பெரியசாமி, மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் 4 பேரையும் விடுவித்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+