Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முக்கிய புள்ளி டார்கெட்.. சென்னையில் களமிறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள்.. காலை முதலே அதிரடி சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் மருந்து நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமானை இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சி.ஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதிமுக ஆட்சிக்காலத்தில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தவர் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.

சென்னையில் 7 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சிஆர்பிஎப் உதவியுடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அசோக் நகரில் உள்ள என்சி எஸ் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

ed-conduct-raid-more-than-7-locations-in-chennai

காலையிலேயே அமலாக்கத்துறை ரெய்டு

தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழில் அதிபர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவனம் மருத்துவத்துறை சார்ந்த உபகரணங்கள் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனம் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதா என்ற கோணத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதேபோன்று விருகம்பாக்கம், சாலிகிராமம், தி. நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல நிறுவனத்தின் இயக்குநர் ஏகே நாதன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

என்சிஸ் டெக்னாலஜி

அசோக் நகர் 7வது நிழற் சாலையில் உள்ள என்சிஸ் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் என்சிஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குனர் அலங்காரநாதனின் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று சேகர் ரெட்டி உறவினர்கள் வீட்டிலும் ரெய்டு நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோயம்பேட்டில் உள்ள குணசேகரன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்யப்பட்ட நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் காலை முதலே நடைபெற்று வரும் இந்த அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை தொடர்பாக விரிவான தகவல் அமலாக்கத்துறை தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை.

முன்னாள் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி

விருகம்பாக்கம் காவேரி தெருப் பகுதியில் பாண்டியன் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. பாண்டியன் என்பவர் மாசு கட்டுப்பாட்டு வாரியத் துறையில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு ஒன்று உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் துறை கண்காணிப்பாளராக இருந்த போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி இவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தம்மான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இதில் 1.37 கோடி ரொக்கம், 3 கிலோ தங்க கட்டிகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+