பொன்முடியை தொடர்ந்து மகன்.. திமுக எம்பி கவுதம சிகாமணி மீதான அமலாக்கத்துறை வழக்கு இன்று விசாரணை
சென்னை: பொன்முடியின் மகனும், திமுக எம்பியுமான கவுதம சிகாமணிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் சம்பந்தப்பட்ட வழக்கு இன்று மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் 3 ஆண்டு தண்டனை விதித்தது. இதையடுத்து அவரிடம் இருந்து இலாகா பறிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை எதிர்த்து பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது அங்கு நிலுவையில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க 2006-2011 காலத்தில் திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதோடு அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தயதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரில் பொன்முடி மீதும் அவரது மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்பியுமான கவுதம சிகாமணி மீதும் வழக்கு பதிவு செய்பயப்ட்டது
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த புகாரில் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கி சோதனை மேற்கொண்டது. ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் உள்பட ரூ.81.70 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு ரூ.41 கோடியே 90 லட்சம் வங்கி வைப்பு நிதியும் முடக்கப்பட்டது.
மேலும் இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கவுதம சிகாமணி எம்பி உள்பட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் கவுதம சிகாமணி எம்பி நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 24ம் தேதிக்குள் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications