ஓபிஎஸ்-ஐ ஓரம் கட்டுகிறதா பாஜக? 100 கோடி சொத்து முடக்கம்..வைத்தியலிங்கத்தை லாக் செய்த அமலாக்கத்துறை!
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக வைத்தியலிங்கம் இருக்கும் நிலையில் அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை அவர் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவரது நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம். கடந்த 2011 - 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் தமிழக வீட்டு வசதி வாரிய துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அந்த ஆட்சிக்காலத்தின் இறுதியில் அதாவது 2015 - 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரபல நிறுவனம் ஒன்று சுமார் 58 ஏக்கர் பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட விண்ணப்பித்தது. அதற்கான திட்ட அனுமதிக்கு அப்போது அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் புகார் அளித்த நிலையில் வைத்தியலிங்கம் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வைத்தியலிங்கத்தின் இரண்டு மகன்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 2011 - 16 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1058 சதவீதத்திற்கும் அதிகமாக 33 கோடி சொத்து சேர்த்ததாகவும் வைத்தியலிங்கம் அவரது மகன்கள் மீது தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றொரு வழக்கம் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். சென்னை கோடம்பாக்கம், சேத்துப்பட்டு, அரும்பாக்கம், சேப்பாக்கம், தஞ்சை ஒரத்தநாட்டில் உள்ள அவரது இல்லம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்தனர். 10 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை அடிப்படையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான சுமார் 100 கோடி சொத்துக்கள் அமலாக்க துறையால் முடக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"தமிழ்நாட்டின் தற்போதைய எம்எல்ஏவும், முன்னாள் வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். பிஎம்எல்ஏ 2002 சட்டத்தின் அடிப்படையில் கடந்த 9 ம் தேதி வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி மதிப்பிலான 2 அசையா சொத்துகளை சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகம் முடக்கி உள்ளது" என கூறப்பட்டுள்ளது.
தற்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கும் வைத்தியலிங்கம் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் பாஜக ஆதரவாளராக இருக்கிறார். கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒன்றை ஆரம்பித்து பாஜக கூட்டணியில் இணைந்த அவர் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தார்.
தற்போது இரட்டை இலை சின்னம் தொடர்பாக பாஜகவின் ஆதரவை ஓபிஎஸ் நாடியுள்ளார். இந்த நிலையில் அவரது ஆதரவாளர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் தோல்வி அடைந்தார்.
மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அவர் அறிவித்திருந்தாலும், அதிமுகவில் மீண்டும் சேர்வதற்கோ அல்லது பெரிய அளவில் மாவட்ட செயலாளர்களை ஈர்ப்பதற்கோ முடியவில்லை. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தேவையில்லை என்பதாலும், எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர்வதற்கு தூது சொல்லும் முடிவுக்கு பாஜக வந்து இருக்கலாம் என்பதே அமலாக்கத்துறை சோதனையின் மூலம் தெரிய வந்திருக்கும் ரகசிய செய்தி என கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுகவை பொருத்தவரை ஆரம்பத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு இருந்தாலும் தற்போது முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு அதிகமாகி இருக்கிறது. அதே நேரத்தில் சில நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என விரும்புகின்றனர். திமுகவுக்கு எதிர்ப்பு அதிகமாகி இருக்கும் நிலையில் பாஜக கூடுதல் இடங்களை 2026 சட்டமன்ற தேர்தலில் பெற வேண்டும் என்றால் அதற்கு அதிமுகவின் ஆதரவு தேவை என்பதை பாஜக தலைமையின் திட்டம். இதன் காரணமாக எடப்பாடி உடன் கூட்டணி சேர பாஜக தலைமை விரும்புகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி இல்லை என ஆரம்பத்தில் கூறினாலும் தற்போது அதிமுக தொடர்பாக ஒரு சாஃப்ட் கார்னர் உடனே பேசி வருகிறார். எனவே தமிழக பாஜகவும் அதிமுகவுடன் கூட்டணி சேரவே விரும்புகிறது. அதற்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சமாதானப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கலாம் என்கின்றனர். அது மட்டும் அல்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி உறவினர்களின் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில் அதனை சமன் செய்யும் பொருட்டு ஓபிஎஸ் ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications