அமலாக்கத்துறை விசாரணையில் துன்புறுத்தலா? நிருபர் கேள்விக்கு செந்தில் பாலாஜி கொடுத்த ரியாக்சன் -என்ன
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் கஸ்டடியில் வைத்து அமலாக்கத்துறையினர் தீவிரமாக விசாரித்தனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வேளையில், ‛‛அமலாக்கத்துறை விசாரணையின்போது துன்புறுத்தப்பட்டீர்களா'' என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு செந்தில் பாலாஜி கொடுத்த ரியாக்சன் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி அவரை கடந்த மாதம் 14ம் தேதி கைது செய்தனர். நெஞ்சுவலி என துடித்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை பரிசோதனையில் இதயத்தில் அடைப்பு இருந்தால் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சென்னை முதன்மை நீதிமன்றம் மூலம் கடந்த 7 ம் தேதி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்தது.
சென்னை நுங்கம் பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து செந்தில் பாலாஜியிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் செந்தில் பாலாஜியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் கூறிய பதில்கள் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் தான் அமலாக்கத்துறையின் 5 நாள் கஸ்டடி இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் ஆஜர்ப்படுத்தினர்.
அப்போது செந்தில் பாலாஜியிடம் இன்னும் விசாரணை முடியவில்லை. இதனால் கஸ்டடியை 5 நாள் நீட்டிப்பு செய்ய நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதனை நீதிபதி அல்லி ஏற்க மறுத்தார். மாறாக செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியை போலீசார் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.
முன்னதாக நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானபோது அவரது முகத்தில் தாடி இருந்தது. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவர் மிகவும் மெதுவாக நடந்து வந்தார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛விசாரணையில் துன்புறுத்தப்படீர்களா?'' என்ற கேள்வியை கேட்டார். அதற்கு செந்தில் பாலாஜி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications