பாஜக ஆட்சியில் 15,710 கோடி! காங். ஆட்சியில் முட்டை! எந்த ஆட்சியில் இடி செயல்பாடு பெஸ்ட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முந்தைய காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அமலாக்கத்துறை செயல்பட்டதை விட, பாஜக ஆட்சியில் மிகத் தீவிரமாக செயல்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை என்பது ஏவல் துறையாக இருக்கிறது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ED has done very well under BJP rule

இன்றுகூட சென்னையில் அமலாக்கத்துறையினர் 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் வசித்து வரும் முபாரக் உசேன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஐடி ஊழியர் தர்சன்குமார் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுப்பட்டு வருகிறது.

இது தேர்தல் காலம் என்பதால், முன்பைவிட பரபரப்பாக பல இடங்களில் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அமலாக்கத்துறையானது பாஜக ஆட்சியில் எவ்வளவு ஆக்டிவ் ஆக இருந்தது? அதே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எவ்வளவு தூரம் செயலற்று தூங்கிக் கொண்டிருந்தது என்பதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன.

உண்மையில், எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவதைப் போல பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை அரசியலுக்காக தவறாக வழிநடத்தப்படுகிறதா? இல்லை அவர்களின் கடமையில் சரியாக செய்துள்ளனரா? என்பது குறித்து பார்ப்போம்.

2005 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மொத்தம் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் மட்டும் அமலாக்கதுறையால் மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆண்ட காலத்தில் மொத்தம் 1,797 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ED has done very well under BJP rule

ஆனால் அதே பாஜக ஆட்சியான 2014 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இதே அமலாக்கத்துறை அதிகாரிகளால் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 5,155 வழக்குகள் பதிவாகி உள்ளன.

பாஜக ஆட்சி செய்து இந்தப் பத்தாண்டு காலத்தில் மட்டும் 7,264 இடங்களில் சோதனைகள் நடைபெற்றுள்ளன. மொத்தமாக இதுவரை 1,21,618 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

அதே காங்கிரஸ் ஆட்சிகாலமான 2005 முதல் 2014வரை வெறும் 84 சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டு, முடக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு 5,086 கோடியாக இருந்துள்ளது.

ED has done very well under BJP rule

இவர்களின் ஆட்சிக்காலத்தில் வெறும் 43 லட்சம் ரூபாய் மட்டுமே முடக்கப்பட்டிருந்தது. பறிமுதலான சொத்துகளின் மதிப்போ பூஜ்ஜியமாக இருந்துள்ளது.

பாஜகவின் ஆட்சிக்காலத்தில் (2014 -2024) முடக்கப்பட்ட பணத்தின் மதிப்பு 2,310 கோடியாக உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்போ 15,710 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தச் சொத்துகள் யாவும் திரும்பப் பெறமுடியாத வகையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பு என்பது கூடுதலாக சொல்ல வேண்டிய தகவல்.

ED has done very well under BJP rule

அப்படிப் பார்த்தால், காங்கிரஸ் ஆட்சி செய்த காலகட்டத்தில் அமலாக்கத்துறை உண்மையாக செயல்பட்டதா? அல்லது முடக்கிவைக்கப்பட்டிருந்ததா? என்ற சந்தேகம் எழுகிறது.

இந்தத் தரவுகள் யாவும் அமலாக்கத்துறை அளித்துள்ள விவரங்கள் தெரிய வந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+