Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேம் சைடு கோல்.. செந்தில் பாலாஜி வழக்கில் “மெகா டுவிஸ்டு”! அமலாக்கத்துறை வழக்கறிஞரே சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி இல்லை என்று ஒருபக்கம் கபில் சிபல் வாதிட அதையே அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தாவும் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டு உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது மனைவி மேகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற 3 வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று 2 வது நாளாக விசாரணைக்கு வந்தது.

 ED has no rights to investigate under their custody by law - Tushar Mehta in Senthil balaji case

அப்போது, அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிஜிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், "2005 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி, காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்கப்படாவிட்டாலும் புலன் விசாரணை செய்வது அவசியமான ஒன்று.

குற்றத்தை கண்டுபிடிக்க, சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, புகார் வழக்கு தாக்கல் செய்வதற்கு அதிகாரம் உள்ளது. ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணை தான். காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது என்பது வழக்கை புலன் விசாரணை செய்யும் அமலாக்க துறைக்கு புலன் விசாரணை செய்யும் கடமையை மறுப்பதாகும்.

அமலாக்கத் துறை புலன் விசாரணை செய்ய முடியாது என்ற மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை ஏற்றுக் கொண்டால் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்குகளில் சொத்துக்களை முடக்கம் செய்ய மட்டுமே முடியும். சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை 330 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். விருப்பம் போல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூற முடியாது. வங்கி மோசடி வழக்குகளில், 19,000 கோடி ரூபாய் பணத்தை மீட்டு வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம் தானே தவிர, அந்த ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது. அதனால் புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது.

ஆயிரக்கணக்கான மக்கள் பணம் இழந்து தவிக்கிறார்கள். எங்கள் கடமையை செய்ய வேண்டும். விசாரணைக்கு அழைத்தால் வர மறுக்கிறார்கள். சம்மன் அனுப்பினால் வர மறுக்கிறார்கள். அதனால் கைது செய்து விசாரிக்க வேண்டிய நிலைமை உள்ளது. அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லை என்று நான் வாதிட விரும்பவில்லை.

ஆனால் புலன் விசாரணை செய்ய முழு அதிகாரம் சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் இல்லை. இதனால் செந்தில் பாலாஜியிடம் புலன் விசாரணை செய்கிறோம். சம்மன் அனுப்பினோம், அவர் வரவில்லை. இதனால் விசாரணையை தொடங்கினோம். காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டோம். ஆனால் அவர் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார்.

பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் படி சோதனை நடத்தவும், பரிந்துரை செய்யவும் முழு அதிகாரம் உள்ளது. அந்த சோதனையின் போது போதிய ஆதாரங்கள் கிடைத்தால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும், மேலும் விசாரணை நடத்தவும் சட்டத்தின் முன் நிறுத்தவும், தண்டனை பெற்று தரவும் அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது.

தவறாக கைது நடவடிக்கை எடுத்தால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் கைது எண்ணிக்கை குறைவாக உள்ளது. எந்த அழுத்ததுக்கும் அமலாக்க துறை உட்படுவதில்லை.

அப்பாவிகள் கைது செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக இந்த கடுமையான பிரிவுகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அமலாக்கத் துறைக்கு காவல்துறை அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது வேறு சூழ்நிலையில், அதற்காக காவலில் வைத்து விசாரிக்கும் அமலாக்கத் துறை உரிமையை பறிக்க முடியாது.

செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை. மேலும், கைது நடவடிக்கை சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது." என்றார். இதில் முதலில் அதிகாரம் இல்லை என்று கூறும் துஷார் மேத்தா பின்னர் கைது செய்ய அதிகாரம் உள்ளது என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+