தி நகர் பிரபல நகைக்கடையின் ரூ.235 கோடி சொத்துகள்.. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னையில் உள்ள பண முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தி நகர் பிரபல நகைக்கடையின் சொத்துக்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, முடக்கப்பட்ட ரூ.235 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என இந்தியன் வங்கி தரப்பில் வாதிடப்பட்டது. அதை ஏற்று முடக்கப்பட்ட ரூ.235 கோடி அசையா சொத்துக்களை இந்தியன் வங்கி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
சென்னை தியாகராய நகரில் இயங்கிய பிரபல நிறுவனத்தின் நகைக்கடை மற்றும் அதன் பங்குதாரர்கள் மீது இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா, சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், தியாகராய நகரில் உள்ள பிரபல தனியார் தங்க நகை நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு வணிக வளாகம் கட்டுவதாக கூறி போலி ஆவணங்கள் மூலம் ரூ.240 கோடி கடன் பெற்றனர். கடனுக்குரிய வட்டியையும் செலுத்தவில்லை. கடன் தொகை முழுவதையும் மோசடி செய்துவிட்டனர். இதன் மூலம் வங்கிக்கு ரூ.312 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் அடிப்படையில் அந்த நகைக்கடை மீதும், பங்குதாரர்கள் மீதும் சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த பண முறைகேடு தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சென்னை அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பிரபல நகைக்கடைக்கு சொந்தமான ரூ.235 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை முடக்கினார்கள்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பண முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, முடக்கப்பட்ட ரூ.235 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என இந்தியன் வங்கி தரப்பில் வாதிடப்பட்டது. அதை ஏற்று முடக்கப்பட்ட ரூ.235 கோடி அசையா சொத்துக்களை இந்தியன் வங்கி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அந்த சொத்துக்கள் விரைவில் இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்கப்படும் என்று அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications