தலையே சுத்திடுச்சு.. கூட்டணி முறிந்த மறுநாள் காலையே ஈடி ரெய்டு.. பதறிய அதிமுக? யாருங்க டார்கெட்?
சென்னை: தமிழ்நாட்டில் திடீரென இன்று காலை நடக்கும் அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக அதிமுகவினர் பதற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்களாம்.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக அமலாக்கத்துறை அடிக்கடி ரெய்டுகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். வேலைவாய்ப்பு வாங்கி கொடுப்பதில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை ரெய்டுக்கு செந்தில் பாலாஜி உள்ளானார்.
இதில் அவரிடம் நீண்ட விசாரணை நடத்தி அமலாக்கத்துறை அவரை கைதும் செய்ததும். தற்போது புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு இதுவரை பெயில் கிடைக்கவில்லை. அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

இன்னொரு பக்கம் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை மூலம் ரெய்டுக்கு உள்ளானார். அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படாமல் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்பின் மணல் விற்பனையாளர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு எல்லாம் பார்க்கும் போது திமுகவின் நிதி ஆதாரங்களில், திமுகவிற்கு தேர்தல் செலவு செய்யும் நபர்களிடம் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துகிறதோ என்ற கேள்வி எழுந்தது.
( கூட்டணியை முறிச்சாலும்.. பாஜக மீது பாசத்தை பாருங்களேன்.. அதிமுக மீட்டிங்கில் எடப்பாடி போட்ட ஆர்டர்! )
அதாவது 2024 லோக்சபா தேர்தலில் திமுகவை வேலை செய்ய விடாமல் தடுக்கும் விதமாக அவர்களின் நிதி ஆதாரங்களை டெல்லி குறி வைக்கிறதோ என்ற விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில் இன்று மீண்டும் அடுத்த கட்ட ரெய்டுகள் நடந்தன.
இன்று திடீரென 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்தது . தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்தது . சென்னை ஓஎம்ஆர் உள்பட தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலபதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்தது.
பெரும்பாலும் ரியல் எஸ்டேட் துறையினர்தான் அதிகம் குறி வைக்கப்பட்டனர். தி நகர் சரவணா தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலபதிபர் சண்முகம் வீட்டில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
வீடு பூட்டி இருந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரை தளத்தில் காத்திருந்து பின்னர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலதிபர் சண்முகம் அடிக்கடி விஜய் அபார்ட்மெண்டில் 2வது மாடியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
பதற்றம்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் திடீரென இன்று காலை நடக்கும் அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக அதிமுகவினர் பதற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்களாம். நேற்றுதான் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது.
( சுழலில் சிக்கிய அதிமுக.. டிடிவி + ஓபிஎஸ் + ராமதாஸ்.. பாஜக இறக்கும் புது கூட்டணி.. அரண்ட எடப்பாடி )
பாஜகவுடன் இனி கூட்டணி வைக்க மாட்டோம். இரண்டு தரப்பு உறவு முறிந்துவிட்டது. அதிமுக லோக்சபா 2024 தேர்தலில் தனியாக கூட்டணி அமைக்கும். பாஜகவுடன் தேர்தல் சந்திக்க மாட்டோம் என்று கூறியது.
இந்த நிலையில்தான் மறுநாளே இந்த ரெய்டு நடக்கிறது. அமலாக்கத்துறை இந்த ரெய்டு அதிமுகவிற்கு நெருக்கமானவர்களை குறி வைத்து நடக்கிறதா? அல்லது திமுக டார்கெட் செய்யப்பட்டுள்ளதா என்று இன்னும் பலருக்கும் புரியவில்லை.
திடீரென ரியல் எஸ்டேட் குறி வைக்கப்பட என்ன காரணம்.. நம்மை ஈடி குறி வைக்கிறதோ என்று அதிமுக பதற தொடங்கி உள்ளதாம். ரியல் எஸ்டேட் துறையில் யாரெல்லாம் குறி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் அதிமுகவினருக்கு தொடர்பு உள்ளதா என்று அதிமுக தலைகள் விசாரிக்க தொடங்கி உள்ளனராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications