பாஜகவை ரொம்ப விமர்சிக்காதீங்க.. கூட்டணியே போனாலும்.. பாசத்தை பாருங்க.. மீட்டிங்கில் எடப்பாடி ஆர்டர்
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டாலும் கூட பாஜகவிற்கு ஆதரவாக நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான உத்தரவு ஒன்றை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி நேற்று பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் முற்றிலுமாக முறிந்தது. பாஜக உடன் இனி கூட்டணி இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை எங்கள் கட்சி தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.

அவரின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் நாங்கள் கூட்டணியை முறித்துக்கொள்கிறோம். இனி தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறுகிறோம். அதோடு 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம், என்று அதிமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்.. பாஜகவுடன் கூட்டணி இல்லை. பயப்பட வேண்டாம். தேர்தலில் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டோம். இதை மக்கள் நம்ப வேண்டும். இதற்காக நாம் மக்களிடம் சென்று பேச வேண்டும் .
நாம் கண்டிப்பாக தேர்தலுக்கு முன்போ, பின்போ கூட்டணி வைக்க மாட்டோம் என்று போய் அவர்களிடம் பேச வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம். நாம் தேர்தலை தனியாக சந்திப்போம். தேர்தலுக்கு பின்பும் தனியாக இருப்போம் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. அதன்படி மக்களிடம் சென்று அதிமுக- பாஜக கூட்டணி முறிவை பற்றி பேசுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறாராம்.
இன்னொரு பக்கம் வேறு ஒரு முக்கியமான விஷயத்தையும் சொல்லி உள்ளாராம். அதன்படி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டாலும் கூட பாஜகவிற்கு ஆதரவாக நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான உத்தரவு ஒன்றை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கூட்டணி முறிந்துவிட்டது என்பதற்காக பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளாராம். அதாவது பாஜக குறித்து பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்க
வேண்டாம். தேவையின்றி பாஜக தலைவர்களை தவறாக பேச வேண்டாம். கூட்டணிதான் முறிந்துவிட்டதே என்பதற்காக மோடி அரசை விமர்சனம் செய்ய வேண்டாம்.
மோடி கொண்டு வரும் திட்டங்களை திமுக போல எதிர்த்து பேச வேண்டாம், என முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தல் செய்துள்ளதாம். கட்சித் தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஊடகங்களில் பேச வேண்டும். அவர்களும் நாகரீகமாக பேச வேண்டும். விவாத நிகழ்ச்சிகளில் தேவையின்றி வார்த்தைகளை விட கூடாது.
அதை விட தவிர வேறு யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது, சாதாரண பேட்டிகளில் பாஜகவிற்கு எதிராகவோ, மோடிக்கு எதிராகவோ பேசவே கூடாது என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். வேற கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து பொதுச் செயலாளரே இறுதி முடிவு எடுப்பார். அவர் தேர்தல் காலத்தில் நல்ல முடிவை எடுப்பார். ஆலோசனைகளை செய்வார். அதனால் கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், பேட்டி கொடுக்க வேண்டும். கூட்டணி குறித்து பொது செயலாளர் இறுதி முடிவு எடுக்கும் வரை அதிமுக நிர்வாகிகள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications