Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தடாலடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. வாரத்தின் தொடக்க நாளான நேற்றும் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. வழக்கமாக தங்கம் விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்தாலும், கடந்த ஆண்டில் இருந்து தான் தாறுமாறாக உயரத் தொடங்கி உச்சம் தொட்டது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றமும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது.

தொடர்ந்து அதிகரித்த தங்கம் விலை
முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தில் முதலீடுகளை அதிகரித்ததும் தங்கம் விலை தாறுமாறாக உயர காரணமாக சொல்லப்படுகிறது. நடப்பு ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் ரூ.97 ஆயிரம் என உயர்ந்தது. தொடர்ந்து பிப்ரவரி தொடக்கத்தில் ரூ.1.25 லட்சம் என்ற அளவுக்கு சென்றது. அதன் பிறகு தங்கம் விலை ஈரான் - அமெரிக்கா போரின் போது குறையத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த 11 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,000-க்கு விற்பனை ஆனது. ஆனால் அதற்கு பிறகு தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் நேற்று சென்னையில் ரூ.210 உயர்ந்து ரூ.14,070-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?
கடந்த வாரம் தொடக்கத்தில் சரிந்து வந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது நகை பிரியர்களை கவலையில் ஆழ்த்தி இருந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையை போன்று நேற்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. இதனால் சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலை ரூ.5 குறைந்து கிராம் ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
16.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480
15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
14.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880
13.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880
12.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
11.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,000
10.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440
04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840
03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960
18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400
13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!














Click it and Unblock the Notifications