சுழலில் சிக்கிய அதிமுக.. டிடிவி + ஓபிஎஸ் + ராமதாஸ்.. பாஜக இறக்கும் புது கூட்டணி.. அரண்ட எடப்பாடி
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக வைத்திருந்த கூட்டணி முறிந்த நிலையில், புதிதாக பாஜக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி எந்த வடிவம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவுடன் வைத்திருந்த கூட்டணியை அதிமுக நேற்று முறித்துக்கொண்டது. அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோர் உடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய மீட்டிங்கில் கூட்டணி முறிந்ததாக முடிவு எடுக்கப்பட்டது.

அதோடு 2024 லோக்சபா தேர்தலை தனியாக கூட்டணி அமைத்து சந்திப்போம் என்றும் அறிவித்து உள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் இனி என்டிஏ கூட்டணியில் அதிமுக இல்லை என்பதே நிலை.
என்டிஏ கூட்டணி: இந்த நிலை காரணமாக தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது என்டிஏ கூட்டணியில் புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே (அதிகாரபூர்வமற்ற முறையில்) உள்ளன.
இந்த நிலையில் பாமக பெரும்பாலும் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்புகள் உள்ளன. அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த பாமக எடப்பாடி பழனிசாமி உடன் ஏற்பட்ட மோதலால் கூட்டணியை உடைத்து வெளியேறியது. முக்கியமாக எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை பண்பு சரியில்லை. அவர் தொண்டர்களை கட்டுப்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதன் காரணமாக அதிமுக உடன் பாமக கூட்டணியை முறித்தது. அதேபோல் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே இட ஒதுக்கீடு பிரச்சனையில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டது. இதனால் அவர்களும் தனியாகவே இருக்கிறார்கள்.
இது போக அமமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க ரெடியாகவே உள்ளது. இவர்கள் எல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியை உருவாக்கலாம். இவர்களுக்கு எல்லாம் சேர்த்து 10-11 சதவிகிதம் வாக்கு வங்கி இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அதோடு தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய அளவில் வாக்குகளை பிரிக்கும் சக்திகளாக இவர்கள் செயல்பட வாய்ப்புகள் உள்ளன. அதேபோல்தற்போது அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டு உள்ளார். அவருக்கு என்று அதிமுகவில் தென் தமிழ்நாட்டில் இப்போதும் ஆதரவு உள்ளது. இவர் தனியாக கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியும்.
அதன்படி தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியில், பாஜக + பாமக + ஓபிஎஸ் + டிடிவி தினகரனின் அமமுக+ புதிய தமிழகம் + தமிழ் மாநில காங்கிரஸ் + ஐஜேகே + தேமுதிக + ஏசி சண்முகத்தின் புதிய தமிழகம் கட்சி ஆகியவை சேர்ந்து கூட்டணி அமைத்து புதிய என்டிஏ கூட்டணியை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கணிசமான வாக்கு வங்கி: இதில் பாமகவிற்கு 3-4 சதவிகிதம் வாக்கு வங்கி உள்ளது. பாஜகவிற்கு 5 சதவிகிதம் வரை வாக்கு வங்கி உள்ளது. தேமுதிகவுக்கு 2 சதவிகிதம் வரை வாக்கு வங்கி உள்ளது. இவர்கள் + மற்ற கட்சிகள் சேர்ந்தால் மொத்தமாக வாக்கு வங்கி 11 வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இதை வைத்துக்கொண்டு பாஜக தேர்தலில் வெற்றிபெற முடியாது என்றாலும் ஒரு சில இடங்களில் வாக்குகளை வெகுவாக பிரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் இவர்கள் அதிமுக வாக்குகளை பிரிகிறார்களா? திமுக வாக்குகளை பிரிகிறார்களா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை












Click it and Unblock the Notifications