லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அந்த கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சியை தொடங்கும் முனைப்பில் உள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் டெல்லி பாஜக மேலிட தலைவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். குறிப்பாக பாஜகவில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி தருகிறோம் என்று கூறியும் கூட அவர் ஏற்காத நிலையில் தற்போது அவர் 4வது நாளாக டெல்லியிலயே உள்ளார். இந்நிலையில் தான் டெல்லியில் என்ன நடக்கிறது? அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தற்போது டெல்லியில் உள்ளார். கடந்த 1ம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை இன்னும் தமிழகம் வரவில்லை. இவர் டெல்லியில் பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து ராஜினாமா பற்றி தெரிவித்துள்ளார்.

annamalai-would-not-withdraw-his-resignation-what-exactly-is-going-in-tamil-nadu-bjp

ஆனால் அவர்கள் அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்கவில்லை. அண்ணாமலையின் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய பாஜக மேலிட தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் அண்ணாமலை ராஜினாமா முடிவில் இருந்து மாறவிரும்பவில்லை. அவர் உறுதியாக உள்ளார். பாஜகவை விட்டு வெளியே வந்து புதிய அரசியல் கட்சி தொடங்க தயாராகிவிட்டார்.

இன்று அண்ணாமலைக்கு பிறந்தநாளாகும். இதனால் அவர் தனது புதிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அவர் டெல்லியிலேயே உள்ளார். மேலிட தலைவர்கள் கூறியதால் அண்ணாமலை டெல்லியிலேயே தங்கி உள்ளார். தற்போதும் அண்ணாமலையை சமாதானம் செய்யும் முயற்சி நடந்து வருகிறது. இருப்பினும் அண்ணாமலை தனது முடிவில் இருந்து பின்வாங்க வில்லை. ராஜினாமா முடிவில் உறுதியாக உள்ளாராம்.

இதுபற்றி அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கூறுகையில், ''பாஜக தலைவர்கள் அண்ணாமலைக்கு கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. ராஜினாமா முடிவில் அவசரம் காட்ட வேண்டாம் என்று கூறி சமாதானம் செய்தனர். அண்ணாமலை கட்சியில் தொடர்ந்தால் தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படலாம். அதற்கான வாய்ப்புகளை தருகிறோம் என்று தலைவர்கள் கூறினர்.

ஆனால் அண்ணாமலை பிடிகொடுக்கவில்லை. மேலும் அண்ணாமலையின் ராஜினாமா முடிவு என்பது ஒரு இரவில் எடுக்கப்பட்ட முடிவு அல்லது. நன்கு யோசித்து தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் 3 மாதங்களுக்கு முன்பே சொந்தக் கட்சியைத் தொடங்குவது குறித்து அண்ணாமலை முடிவெடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணிக்கு மாற்றாக பாஜக தமிழகத்தில் தனிக்கட்சி பாதையில் செல்ல கடந்த 18 மாதங்களாகப் போராடினார். ஆனால் அவரது பேச்சை தேசிய தலைமை கேட்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்து 4 எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை ஒன்றுக்கு கொண்டு வந்துள்ளது.

தற்போது டெல்லியில் பாஜக மேலிட தலைவர்களிடம் தனது தலைமையில் பாஜக கண்ட வளர்ச்சியை தெளிவாக எடுத்துரைத்தார். 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 3 சதவீத வாக்கு பெற்ற நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் பாமக, தமாகா, அமமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டு 11 சதவீத வாக்குகளை பெற்றதாக எடுத்துரைத்தார். எம்பி கிடைக்காவிட்டால் பாஜகவிற்கு நேர்மறையான வளர்ச்சி கிடைத்தது. ஆனால் அதனை பாஜக சட்டசபை தேர்தலில் பயன்படுத்த தவறிவிட்டது'' எனக்கூறி விலகி உள்ளார்.

மேலும் அண்ணாமலை ராஜினாமாவை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். நேற்றைய தினம் அவர் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்தார். மத்திய உள்துறை அமைச்சர் திரிபுரா மற்றும் நிதின் நபின் பீகாரில் இருந்ததால் நேற்று நயினார் நாகேந்திரனால் அவர்களை சந்திக்க முடியவில்லை. இன்று அவர்கள் டெல்லி திரும்பி உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன இருவரையும் சந்திக்க உள்ளார். அப்போது அண்ணாமலை விவகாரம் பற்றி பேசி கடைசியாக அவரை சமாதானம் செய்ய பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. ஆனால் ராஜினாமா முடிவில் அண்ணாமலை உறுதியாக உள்ளதால் பாஜக மேலிடத்தின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+