2 நாளாக நடந்த அமலாக்கத்துறை ரெய்டு.. லாட்டரி மார்ட்டின் அலுவலகத்தில் சிக்கிய ரூ.8.80 கோடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'லாட்டரி மன்னன்' மார்ட்டின் நிறுவன அலுவலகத்தில் இருந்து, 8.8 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை. லாட்டரி நிறுவன அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தொடர்புடைய இடங்களில் 2 நாட்களாக அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர்.

சிக்கிம் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டியதாக, கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், லாட்டரி விற்பனை மூலமாக முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அதை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மார்ட்டின் முதலீடு செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

enforcement directorate martin aadhav arjuna

அதைத் தொடர்ந்து லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில், அமலாக்கத்துறையினர் தொடர்ச்சியாக கடந்த 2019, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளில் அடிக்கடி சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களில் கோவையில் உள்ள மார்ட்டின் மற்றும் அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் தொடர்ச்சியாக, பல கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையாத சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் (நவம்பர் 14) அமலாக்கத் துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர். மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா வீடு, அலுவலகங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூரை அடுத்த வெள்ளகிணறு பிரிவு பகுதியில் உள்ள மார்ட்டின் வீடு, அருகேயுள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நேற்று அதிகாலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

கோவை சாய்பாபா காலனி மற்றும் சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தாபுரம் ஆகிய இடங்களில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியான லீமாரோஸ் மார்ட்டினின் உறவினர் இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைகளில் மார்ட்டின் அலுவலகத்தில் ரூ.8.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வாங்கிய பட்டியல் வெளியான நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு மார்ட்டினின் நிறுவனம் ரூ. 1,368 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து இருந்தது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+