Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"3" இடி மத்தளத்துக்கு.. தரைமட்டமாகும் பிளான்.. எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? குறுக்கே திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் மாநாட்டை கூட்டி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இது பலவிதமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த மதுரை மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார். அத்துடன் சில விஷயங்களை குறி வைத்து காய்நகர்த்தியும் வருகிறார்.

Edapadi Palanisamy Madurai Conference and What are the Major Strategies of DMK Government

3 பிளான்கள்: வெற்றிகரமாக நடத்தி முடித்து, முக்குலத்தோர் ஆதரவை சம்பாதிக்க வேண்டும் + ஓபிஎஸ், தினகரன் இல்லாமலேயே அதிமுகவுக்கான செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் + ஒட்டுமொத்த அதிமுகவே தன்னுடைய தலைமையின்கீழ் சிறப்பாக செயல்படுகிறது என்பதையும் பறைசாற்ற வேண்டும். இப்படி 3 குறிக்கோள்களை மையப்படுத்தி, மதுரையில் எடப்பாடி களமிறங்குவதாக தெரிகிறது.

அதனால்தான், தன்னுடைய செல்வாக்கை நேரடியாகவே பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரதமர் மோடியை மதுரைக்கு அழைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.. எப்படியாவது அவரை மாநாட்டுக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்று நிறைய முயற்சிகளையும் எடுத்திருந்தார்.ஆனாலும், அதில் அவருக்கு பலன் கிட்டவில்லை.

தென்மண்டலம்: எனினும், எடப்பாடி நடத்த போகும் இந்த மாநாட்டினை பாஜக உற்று கவனித்த வருகிறது. தென்மண்டலத்தில் எடப்பாடிக்கு ஓட்டுபலம் இல்லை என்று பலரும் சொல்லி வரும்நிலையில், இதை முறித்துக்காட்ட முடிவு செய்துள்ளார். ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமியிடம், கட்சியும், இலையும், சின்னமும் அதிகாரப்பூர்வமாக உள்ள நிலையில், ஆதரவு பலத்தையும் வெளிப்படுத்திவிட்டால், பாஜகவை இணங்க செய்துவிடலாம் என்றும் எடப்பாடி கணக்கு போடுகிறார்.

அதுமட்டுமல்ல, இந்த மாநாட்டை எடப்பாடி வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டால், ஓபிஎஸ், தினகரன் குறித்த முடிவை, பாஜக கைவிட்டுவிடும் என்றும், எடப்பாடி பழனிசாமிக்காவே, அவர்களை பாஜக கழட்டிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

அதேபோல, அதிமுகவின் உட்கட்சி பூசலால், தென்மண்டலங்களில், இந்த 2 வருங்களில் திமுக வலுவாகி வந்துள்ளது.. இதனால் திமுகவுக்கான ஓட்டுவங்கியும் ஓரளவு அதிகரித்துள்ளதாக சொல்கிறார்கள். இதையும் நொறுக்கவே, எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளாராம். அதனால்தான், திமுக தரப்பிலிருந்தே முக்கிய புள்ளி ஒருவருக்கு வலையை வீசி தன்பக்கம் இழுக்க போவதாகவும், மாநாட்டு பந்தலில் அந்த பிரமுகர் யார் என்பது தெரியவரும் என்றும் சொல்கிறார்கள்.

Edapadi Palanisamy Madurai Conference and What are the Major Strategies of DMK Government

இதற்கு நடுவில், இதே ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்த போகிறது திமுக.. மத்திய பாஜகவை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தை நடத்தி, அதன்மூலம் மாநாட்டை மீடியாவின் கவனத்தையும், மக்களின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பவும் திமுக பிளான் செய்து வருகிறதாம்.. இதனால், பாஜகவுக்கு செக் வைத்ததுபோலவும் இருக்கும், எடப்பாடி பழனிசாமியின் மாநாடும் மக்கள் மன்றத்தில் எடுபடாமல் போய்விடும் என்று திமுக கணக்கு போடுகிறதாம்.

இந்த சூழலில், இன்றைய தினம் டெல்லி செல்கிறார் ஆளுநர் ரவி.. திமுக ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ள நிலையில், ஆளுநர் ரவியின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆக, பாஜக + திமுக + ஓபிஎஸ் என 3 தரப்புக்கு எடப்பாடி பழனிசாமி செக் வைக்க நினைத்தால், எடப்பாடி பழனிசாமிககே செக் வைக்க போகிறதாம் திமுக.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

டிஸ்ப்ளே: இதனிடையே, மாநாட்டை முன்னிட்டு "வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு" என்ற லோகோவை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள அனைவரும் தங்கள் சமூகவலைத்தள கணக்குகளில் டிஸ்ப்ளே படமாக வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாம்.. இதற்கு பின்னாலும் ஒரு அரசியல் கணக்கு இருப்பதாக சொல்கிறார்கள். நாளை மாலையே மதுரைக்கு வரும் எடப்பாடி பழனிசாமி, மாநாடு நடக்கும் இடம் அருகே பரம்புபட்டியில் அவர் ஓய்வெடுக்க விருந்தினர் விடுதி தயார் நிலையில் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+