ஏதாச்சும் எனக்கு செய்யணும்னு ஆசை இருக்கா?.. சசிகலாவின் அடுத்த அறிக்கை.. மிரண்டு பார்க்கும் அதிமுக
தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்
சென்னை: தமிழகமெங்கும் பலத்த மழை பெய்து வரும் நிலையில், தொண்டர்களிடம் சசிகலா ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அதிமுகவுக்குள் ஏகப்பட்ட உட்கட்சி பூசல்கள் தலைதூக்கி உள்ளன.. எடப்பாடி பழனிசாமிக்கான செல்வாக்கு குறைந்து வருவதாக ஒரு தரப்பில் கூறப்பட்டாலும், மற்றொரு பக்கம் அவ்வளவு சீக்கிரம் தன்னுடைய அதிகாரத்தை விட்டுத்தர மாட்டார்கள் என்கிறார்கள்.
அதேபோல, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தனி செல்வாக்கை நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறார்.. இதற்காகவே தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் விதத்தில் தனியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.. இந்த நிலையில், அதே பாணியை தற்போது சசிகலாவும் கையில் எடுத்துள்ளார்.

லெட்டர்பேடு
அடிக்கடி அறிக்கைகளை வெளியிட தொடங்கியிருக்கிறார்... அதுவும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, என்கிற லெட்டர் பேடில் தான் அறிக்கைகளை வெளியிடுகிறார்.. தன்னுடைய தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்தை கூட அந்த அறிக்கையில்தான் தெரிவித்திருந்தார்.. "தீபாவளி வாழ்த்தையும், பொன்னாடை, பூங்கொத்துக்களைத் தவிருங்கள்" என்கிற வேண்டுகோளையும் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

சசிகலா
அதேபோல 2 நாளைக்கு முன்பும், முதல்முறையாக, ஆளும்கட்சிக்கு கோரிக்கை விடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் சசிகலா. விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நெல் கொள்முதலைத் துரிதமாகச் செய்து அதற்குரிய தொகையை உடனடியாக வழங்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொண்டிருந்தார்..

கொரோனா
இந்த நிலையில், மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் சசிகலா... கடந்த சில தினங்களாகவே தமிழகமெங்கும் மழை வெள்ள பாதிப்புகள் பெருகி வரும் நிலையில், கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள் என்று தொண்டர்களை உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்:

ஆட்சேபனை
அதிமுக என்ற ஒரு மாபெரும் இயக்கத்தின் வழி வந்த என் உயிர் தொண்டர்களுக்கும், என்னை நேசிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எனக்கு மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உதவிகள்
அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், தாங்கள் வாழுகின்ற இடத்துக்கு அருகில் உள்ள ஏழை-எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டவர்களுக்கும், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

அதிமுக
அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்களையெல்லாம் நீங்கள் வாழும் இடத்துக்கே நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். விரைவில் சந்திப்போம்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இதையடுத்து, சசிகலாவின் ஆதரவாளர்கள் பம்பரமாய் சுழன்று நிவாரண பணிகளில் நேரடியாக ஈடுபட துவங்கி உள்ளனராம்.. அடுத்தடுத்து வெளிவரும் சசிகலாவின் அறிக்கைகள் அதிமுக மேலிட கூடாரத்தை அசைத்து பார்த்து வருகிறது.
-
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்











Click it and Unblock the Notifications