"வாக்குமூலம்" தந்த ஸ்டாலின்.. அதுவும் தூங்கி எழுந்ததுமே.. சர்வாதிகாரியாமே.. சீண்டிய எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி திமுக அரசை சரமாரியாக ஆத்தூர் கூட்டத்தில் விமர்சித்துள்ளார்
சென்னை: திறமையில்லாத ஒரு முதல்வர் இந்த தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார் என்றும், சொந்த கட்சிக்காரர்களை பார்த்து பயப்படும் நிலைமைக்கு ஸ்டாலின் சென்றுவிட்டார் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் பேசிய பேச்சு, மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி விட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில், கட்சிக்காரர்கள் ஏற்படுத்தும் பிரச்னை குறித்து வேதனையுடன் பேசியிருந்தார்.. அத்துடன் தன்னுடைய கட்சிக்கார்களுக்கு முக்கிய அறிவுரையையும் கூறியிருந்தார்.

மத்தளம்
மேடையில் ஸ்டாலின் பேசியபோது, அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள். பல்முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவன் நான். ஒரு பக்கம் திமுக தலைவர் மறுபக்கம் தமிழ்நாடு முதல்வர். மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி என்பது போல் உள்ளது என்னுடைய நிலைமை.. இந்த சூழலில் உள்ள என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள், அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் சொல்வது?

உடம்பை பாருங்க
உண்மையில் நாள்தோறும் நம்மவர்கள் யாரும் பிரச்சனையை உருவாக்கியிருக்க கூடாது என்று தான் கண்விழிக்கிறேன்... இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட ஆக்குகிறது. என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என்று வேதனையாக பேசினார் முதல்வர் ஸ்டாலின்.. அவரது இந்த உருக்கமான பேச்சு இப்போது சோஷியல் மீடியாவில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

பெரிய தலைவலி
அத்துடன் எதிர்க்கட்சிகள் இதை வைத்தே விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.. அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி, ஆத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில், ஸ்டாலின் பேச்சை கிண்டலடித்துள்ளார்.. எடப்பாடி பேசியதாவது நான் காலையில் கண் விழித்துபார்க்கும்போது, ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் எழுவதாக சொல்கிறார்.. அப்படி என்றால் என்ன அர்த்தம்? ஸ்டாலின் நிலைமையை பார்க்கும்போது, பரிதாபமாக உள்ளது.. ஏன்னா, கட்சிக்காரர்களை பார்த்து அவரே பயப்படுகிறார்.. தினமும் பத்திரிகைகளில், ஊடகங்களில் வரும் செய்திகள் எல்லாமே திமுககாரர்கள் தரும் பிரச்சனைதான்.. அந்த தலைவலிதான் அவருக்கு..

வாக்குமூலம்
அதை பார்த்து பயந்து நடுங்கி, காலையில் எழுந்து எதுவுமே நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டு கண்விழிக்கிறேன் என்று அவரே வாக்குமூலம் தந்துள்ளார். இவர் ஆட்சியில் எதை சந்தித்து இருக்கிறார்? வறட்சியை சந்தித்து இருக்கிறாரா? வெள்ளம் வந்தபோது அதை சந்தித்தாரா? புயல் வந்தபோது சந்தித்தாரா? கொரோனா தொற்று முதன்முலில் தமிழகத்தில் வந்தபோது, கடுமையான பாதிப்பை எதிர்கொண்டாரா? ஒன்றுமே செய்யல.. இப்படி எதுவுமே செய்யாதபோது, கண்விழிக்கிற நேரத்தில் பயப்படும் நிலைமைக்கு முதலமைச்சர் சென்றுவிட்டார்..

சர்வாதிகாரி
8 மாசத்துக்கு முன்னாடி ஸ்டாலின் என்ன சொன்னார்? நான் சர்வாதிகாரியாக இருப்பேன் என்று சொன்னார்.. ஆட்சிக்கு வந்து 6,7 மாதம் இருக்கும்.. அப்போதுதான் ஒரு கூட்டத்தில் அதை சொன்னார் ஸ்டாலின், "ஒழுக்கமாக கட்சியில் பணி செய்யாமல், யாராக இருந்தாலும் பார்க்க மாட்டேன், கடுமையான நடவடிக்கை எடுப்பேன்" என்று சொன்ன அதே ஸ்டாலின், இன்று கெஞ்சுகின்ற நிலைமையை நாம் பார்க்கின்றோம்... ஆக, திறமையில்லாத ஒரு முதல்வர் இந்த தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.. வேற என்ன சொல்வது" என்றார் எடப்பாடி பழனிசாமி.
-
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள்












Click it and Unblock the Notifications