"கைமாறிய" பவர்.. எடப்பாடியா இப்படி சொல்றாரு.. என்ன திடீர்னு? அதிமுக மா.செ.கூட்டம் கூட்டம் இதுக்காகவா
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட உள்ள நிலையில், மிகுந்த பரபரப்பும், எதிர்பார்ப்பும், கூடிவருகிறது.
ஒருவருட காலமாகவே, அதிமுகவுக்குள் ஒற்றை தலைமை பூசல் நிலவிவந்த நிலையில், அது கடந்த வருடம் பொதுக்குழு கூட்டத்தின் வெளியே, உடைத்து கிளம்பியது..

கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி இந்த பொதுக்குழு கூட்டம் நடந்தது.. அதிமுக சட்டவிதிகளில் மாற்றம் செய்து அதிமுக பொதுக்குழு செயற்குழு தீர்மானம் அன்றைய தினம் நிறைவேற்றியது.
சட்டவிதிகள்: ஆனால், சட்ட விதிகளில் மாற்றம் செய்ததை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஹைகோர்ட், சுப்ரீம்கோர்ட்டில், அதிமுக விவகாரத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்ததன் காரணமாக, அந்த சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றாமலேயே இருந்தது.. எனவே, கடந்த ஏப்ரல் மாதத்தில் மாற்றம் செய்யப்பட்ட அதிமுக சட்ட விதிகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் அதிமுகவிற்கு கடிதம் எழுதி இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்று, இந்த சட்ட விதிகளை முழுமையாக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இணையத்திலும் பதிவேற்றிவிட்டது.. இன்று அல்லது நாளை, அதிமுகவின் முழுமையான சட்ட விதிகள் வெப்சைட்டிலும் பதிவேற்றம் செய்யப்படும் என்று அதிமுக வழக்கறிஞர்களுக்கு தேர்தல் ஆணையமும் கடிதம் எழுதியுள்ளது..
அங்கீகாரம்: இப்படி தேர்தல் ஆணைய வெப்சைட்டில், அதிமுகவின் சட்ட விதிகளை பதிவேற்றம் செய்ததன் மூலம் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது... அத்துடன் இரட்டை இலை சின்னமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற கடிதமானது, அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், இன்றைய தினம் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.. இந்த கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்று உறுதியாக தெரியவில்லை.. அதிமுக சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் வெப்சைட்டில் பதிவேற்றி உடனேயே, மறுநாளே மா.செ.க்கள் கூட்டம் கூடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எகிறி வருகிறது..
கட்சி & சின்னம்: கட்சி மற்றும் சின்னம் இரண்டுமே உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், அநேகமாக எம்பி தேர்தலுக்கான வியூகங்கள், பூத் கமிட்டிகள் போன்றவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கலாம் என்கிறார்கள்.. அல்லது மதுரையில் மாநாடு நடத்த உள்ளதால், அது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications