கலைஞர் மகன்தான்.. யார் இல்லைன்னு சொன்னது.. அதுக்காக இப்படியா.. எகிறிய எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி கோவையில் பிரச்சாரம் செய்தார்
சென்னை: திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி. அது கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியை உதயநிதியிடம் கொடுக்க பார்க்கின்றனர். அந்த கம்பெனியை தமிழகத்தில் இருந்து அகற்றவேண்டும்.
தேர்தலுக்கான பிரச்சார களம் அனலடித்து கொண்டிருக்கிறது.. இந்த திமுக கூட்டணி தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தனித்தனியாகவே களமிறங்குகின்றன.
வழக்கம்போல் திமுக அரசை விமர்சித்து அதிமுக பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது.. அதிலும் எடப்பாடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் திமுகவை விமர்சித்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
அந்த வகையில் இன்று கோவையில் பிரச்சாரம் செய்தார்.. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது சொன்னதாவது: "நான் கேட்கிறேன், முதல்வர் ஸ்டாலின் 8 மாத காலத்தில் நாட்டு மக்களுக்கும், கோவை மக்களுக்கும் என்ன செய்தார்? திட்டம் நிறைவேற்றுவது போல் தோற்றத்தை வைத்து ஆட்சி நடத்துபவர் ஸ்டாலின்..

ஹாட் பாக்ஸ்
70 லாரிகளில் ஹாட் பாக்ஸ் லோடு வந்து இறங்கி இருக்கிறது.. திமுகவினர் கொடுத்தால் வாங்கிகொள்ளுங்கள், அது கொள்ளையடித்த பணம்தான்... ஓட்டை மட்டும் இரட்டை இலைக்கு போட்டுங்க.. அமைதி பூங்காவாக இருக்கும் இந்த கோவையில் கலவரத்தை செய்ய முற்பட்டால் அவர்களை மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள்... மக்களுக்கு பாதிப்பு என்றால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.. திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை விட்டுவிட்டு, அதிமுகவில் இருந்து சென்ற 8 பேர் அங்கு அமைச்சர்களாக இருக்கின்றனர். பணம் படைத்தவர்கள் அங்கு சென்றும் அமைச்சர்களாகி இருப்பதற்கு காரணம் அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி்.

அம்மா சிமெண்ட்
அம்மா சிமெண்டை வலிமை சிமெண்ட் என்று மாற்றி, விலையை ஏற்றி 450க்கு விற்கிறார்கள்... திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது.. லோடு லோடாக குட்காவை பிடிக்கிறார்கள்.. சூப்பர் முதலமைச்சர் என்று தனக்கு தானே பேசிக்கொள்கிறார்.. அதிமுக ஆட்சியில் கோவை அமைதி பூமியாக இருந்தது. இப்போ கலவர பூமியாக மாற்ற திட்டம் போடுகிறார்கள்.. அன்னைக்கு அதிமுக ஆட்சியில் நேரடியாக திட்டம் மக்களை நேரடியாக சென்றடைந்தது. ஆனால் இப்போது அந்த கட்சியின் குடும்பத்திற்கு தான் எல்லாம் போய் கொண்டிருக்கிறது.

பொறுப்பாளர்
இந்த கோவை மாவட்டத்திற்கு இப்போது ஒரு அமைச்சரை பொறுப்பாளராக நியமித்துள்ளனர்... அவர் யார் தெரியுமா? 5 கட்சிக்கு போய் வந்தவர்.. தில்லுமுல்லு செய்ய தான் அவரை நியமித்திருக்கிறார்கள்.. கரண்ட் ஏன் அடிக்கடி கட் ஆகுதேன்னு கேட்டால் அணிலை கை காட்டுகிறார் ஒரு அமைச்சர்.. திமுக ஆட்சியில் போலீஸ் துறை குற்றவாளிக்கு துணைபோகிறது.. அது போலீஸ் துறை இல்லை, ஏவல்துறை..

காவல்துறை
இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக உள்ள இந்த காவல்துறையை, திமுகவின் எடுபிடியாக இருப்பதை மாற்றிக் கொள்ளுங்கள். தரம் தாழ்ந்து போனால் இந்த மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.. நான் பச்சை பொய் பேசுவதாக ஸ்டாலின் சொல்றாரே.. நானா பொய் பேசகிறேன்... நீங்கதான் பிரச்சாரத்தில் 525 திட்டங்களை அள்ளிவிட்டீங்க.. இந்தியாவில் எந்த கட்சியும் இவ்வளவு அறிவிப்பு விட்டதில்லை.. அதையும் நம்பி மக்கள் ஓட்டு போட்டார்கள்.. அப்பறம் என்ன நடந்தது? ஒன்னும் நடக்கவில்லை...

கலைஞரின் மகன்
எங்கே போனாலும், நான் கலைஞரின் மகன், சொன்னதை செய்வேன் என்று ஸ்டாலின் சொல்றாரே, அதை யார் இல்லைன்னு சொல்றது.. அதுக்காக சொல்றதை செய்யணும் இல்லை? எதுவுமே செய்யாத காரணத்தால் தான் மக்கள் கேள்வி கேட்கிறார்கள். நீட் தேர்வு குறித்து விவாதம் செய்ய தயாரா என்று கேட்டாரே.. நானும் தயார் என்றுதானே சொன்னேன். ஆனால் இதுவரை பேச்சே இல்லை.... திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி. அது கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியை உதயநிதியிடம் கொடுக்க பார்க்கின்றனர். அந்த கம்பெனியை தமிழகத்தில் இருந்து அகற்றவேண்டும். கோவையை அதிமுக கோட்டை என்பதை நிரூபித்து காட்டுங்கள்" என்றார்.
-
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications