"வார்த்தை" விட்ட பாஜக.. எடப்பாடியிடம் "பணியுதா" மேலிடம்.. அனுகூல சத்துரு அர்த்தம் தெரியுமா.. என்னவாம்
எடப்பாடி பழனிசாமியை பாஜக அங்கீகரிக்கிறதா என்ற கேள்வி எழுந்து வருகிறது
சென்னை: மத்திய அரசின் சட்ட ஆணையம். அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமியை, அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், அதுகுறித்த விவாதங்கள் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒரே நாடு - ஒரே தேர்தல் நடத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமியின் கருத்தை அறியும் வகையில், அவருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது.. மத்திய அரசின் சட்ட ஆணையம் எழுதியிருந்த இந்த கடிதத்தில், எடப்பாடி பழனிச்சாமியை, பொதுச்செயலாளர் என்று பிரத்யேகமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்பு ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழை, எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியிருந்த நிலையில், அதில், இடைக்கால பொதுச்செயலாளர் என்றே மத்திய அரசு சார்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டுள்ளது.

லெட்டர்
டெல்லியில் இருந்தே இப்படியான ஒரு கடிதம் வந்ததையடுத்து, எடப்பாடி தரப்பு குஷியாகி உள்ளது.. ஏற்கனவே, இடைக்கால பொதுச்செயலாளர் என்று கையெழுத்துப் போட்டு தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் தங்கள் வெப்சைட்டில் வெளியிட்டிருந்தது.. இதை கேள்விப்பட்டு ஓபிஎஸ் தரப்பு வருத்தம் அடைந்ததாகவும் சொல்லப்பட்டது.. இப்போது, அடுத்ததாக, இப்படி ஒரு அங்கீரத்தை மத்திய அரசு தந்துள்ளது, மறுபடியும் ஓபிஎஸ் தரப்பை அதிருப்தி அடையசெய்துள்ளது..

டவுட் கிளம்பியது
சுப்ரீம்கோர்ட்டில் இன்னும் தீர்ப்பு எதுவும் வராத நிலையில், தேர்தல் ஆணையம், எடப்பாடி அங்கீகரித்து விட்டதா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், பொதுச்செயலாளர் என்றே மத்திய அரசு சார்பில் இப்போது லெட்டர் வந்துள்ளது.. இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான முடிமம் ராமசாமி ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் சில காரணங்களை அடுக்கி உள்ளார்.. குறிப்பாக, மத்திய அரசு மீதே குற்றச்சாட்டை வைத்துள்ளார்.. பாஜகவுடன் ஓபிஎஸ் நெருங்கியிருக்கும் சூழலில், ஓபிஎஸ் தரப்பில் உள்ளவரே, ஒரு பகீரை கிளப்பி உள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் சொன்னதன் சுருக்கம்தான் இது:

அனுகூல சத்துரு
எடப்பாடி பழனிசாமியே தன்னை, இடைக்கால பொது செயலாளர் என்றுதான் குறிப்பிட்டு வருகிறார்.. அவரே அப்படி குறிப்பிடும்போது, இவர்கள் ஏன் பொதுச்செயலாளர் என்று குறிப்பிட வேண்டும்? யாருமே சொல்லாத சொல்லை, சொல்ல வேண்டிய அவசியம் ஏன் மத்திய அரசுக்கு வந்தது? அனுகூல சத்துருவாக மாற வேண்டிய அவசியம் என்ன? முதலில் அனுகூலமாக இருந்து பிறகு, சத்துருவாக மாறுகிறதா? சட்டப்பிரச்சனை சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.. ஆனால் அதையும் மீறி மத்திய அரசின் சட்டத்துறை இப்படி ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது.

ஹேப்பி ஏன்
சட்டத்துறை சுப்ரீம்கோர்ட்டுடன் மோத தயாராகிவிட்டதா? இதனால் கோபமடைந்து, எடப்பாடி பழனிசாமி மீது, உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கட்டும் என்று சட்டத்துறை நினைக்கிறதா? இந்த கடிதத்தில் பெருமைப்பட ஒன்றுமில்லை.. சந்தோஷப்பட ஒன்றுமில்லை.எப்போதுமே சட்டத்துறைக்கு எதிராகத்தான் உச்சநீதிமன்றம் செயல்படும்.. காரணம், மத்திய அரசு, சட்டத்தை கையில் எடுக்கிறார்கள்.. சட்டத்தை பாதுகாக்க மட்டும்தான் மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறதே தவிர, சட்டத்தை நிலைநாட்டுகிற உரிமை சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டுமே உண்டு.. பொதுச்செயலாளர் என்று கடிதத்தில் மத்திய அரசு குறிப்பிட காரணம், சுப்ரீம் கோர்ட் எடப்பாடிக்கு எதிராக திரும்பட்டும் என்பதால்தான் என்றார்.

ஹோப் ஓபிஎஸ்
இதனிடையே, ஓபிஎஸ் பொதுக்குழுவை கூட்ட தயாராகி வருகிறார் என்ற தகவலையும் சொல்லி உள்ளார் முடிமம் ராமசாமி.. ஊராட்சிகளில் கவனம் செலுத்த போகிறார்களாம்.. தமிழகத்தில் 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ள நிலையில், அத்தனை ஊராட்சி செயலாளர்களும் பதவி நியமனமும் செய்யப்பட உள்ளதாம்.. இப்படி பதவிகளை ஒதுக்குவதால், கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் நடக்கும் என்றும், அதிமுகவை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் நினைக்கிறாராம்.. இதற்காகவே 12500 ஊராட்சி செயலாளர்களை தேந்தெடுக்கும் பணியும் நடந்து வருகிறது என்றும், இந்த பணி முடிந்ததுமே 4ம் தேதி வெளியாகும் நீதிமன்ற தீர்ப்பையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள போவதாகவும் கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications