"இடிக்குதே".. பன்னீர்செல்வத்தை "இருட்டில் பிடித்த கை".. குழம்பும் எடப்பாடி பழனிசாமி.. கவனித்த திமுக
சென்னை: ஓபிஎஸ் + தினகரன் இருவரும் இணைந்துள்ள நிலையில், தென்மண்டலங்களின் வாக்குகளை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு வந்த விஷயம்தான், நேற்றைய தினம் நடந்துள்ளது.. இத்தனை வருடமும், டிடிவி தினகரனின் மறைமுகமான ஆதரவை ஓபிஎஸ் பெற்று வந்த நிலையில், பழைய நண்பரை மீண்டும் சந்தித்து விட்டார் தினகரன்.
இந்த சந்திப்பின் பின்னணி காரணம் என்று பெரிதாக எதுவும் இருக்க வாய்ப்பில்லை.. ஒத்த கருத்துக்களை இருவருமே கொண்டிருக்கும் நிலையில், தென்மண்டல செல்வாக்குகள் வலுப்பெற்றுள்ளன.

தினகரன் + ஓபிஎஸ்: ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் மீண்டும் அழைத்து வந்தாலும், தினகரன், சசிகலாவுடனான தொடர்பையே நாடி செல்வார் என்பதைதான் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே நன்கு அறிந்து வைத்திருந்தார்.. இன்னும்சொல்லப்போனால், ஓபிஎஸ்ஸை அன்று அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கிவைக்க காரணமே, பாஜக + மன்னார்குடி குடும்பம் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள்.. ஓபிஎஸ்ஸை விலக்கி வைப்பதன்மூலம், பாஜகவுக்கு செக் வைக்க முடியும் என்றும் நம்பப்பட்டதாக தெரிகிறது. எனினும், பாஜகவை அதிமுகவால் எந்த சூழலிலும் தவிர்க்கவே முடியாது என்பதுதான் கூட்டணி மூலம் இன்று நிஜமாகி உள்ளது.
அதேசமயம், ஓபிஎஸ்ஸின் அரசியல் இப்போது எதை நோக்கி நகர்கிறது என்ற அடுத்தக்கட்ட கேள்வியும் எழுகிறது.. தினகரனை சந்திதப்பதன் மூலம் அமமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வட்டமடிக்கிறது.. மற்றொருபக்கம், தனி அணியாகவே செயல்பட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தன் இன்னொரு மகனான ஜெயபிரதீப் பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், அதற்கான தூது நடவடிக்கைகளும் ஆரம்பமாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

பழைய பன்னீர்: பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிராக ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் அப்பீலுக்கு சென்றுள்ள நிலையில், அதன் முடிவுகள் எப்படி இருக்க போகிறதென்று தெரியவில்லை.. அதுவரை அமமுகவில் ஓபிஎஸ் இணைவதும் சாத்தியமில்லை என்கிறார்கள்.. அதேசமயம், தனக்கென்று ஒரு கட்சி இருந்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என்ற சூழ்நிலையும் ஓபிஎஸ்ஸூக்கு உருவாகியுள்ளது. ஆனால், தனிக்கட்சி ஆரம்பிக்கவும் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
அதனாலேயே, அமமுகவில் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பன்னீரே விரைவில் வெளியிடுவார் என்றும் சொல்கிறார்கள். சசிகலாவையும் சந்திக்க இருப்பதாக ஓபிஎஸ் சொல்கிறார்.. அப்படியே சசிகலாவை சந்தித்தாலும், சசிகலா மூலம் பெரிய அரசியல் லாபம் ஓபிஎஸ்ஸூக்கு கிடைக்க வாய்ப்பிருக்காது என்றே தெரிகிறது.. அந்தவகையில், "பவர்புல்" தினகரனின் அரசியல் ஓபிஎஸ்ஸுக்கு இன்றைய தேவையாக இருக்கிறது.
முக்குலத்தோர் வாக்குகள்: காரணம், தனக்கான ஓட்டு வங்கி எவ்வளவு என்பதை ஒவ்வொரு தேர்தலின்போதும் தினகரன் நிரூபித்து வருகிறார்.. ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு எவ்வளவு வாக்கு வங்கி உள்ளதென்று இதுவரை தெரியவில்லை.. இதுவரை தனித்தும் அவர் களமாடியதில்லை.. ஆனால், முக்குலத்தோர் வாக்குகள் ஓரளவு இருப்பதாக நம்பப்பட்டு வருகிறது.. எப்படி பார்த்தாலும், சமூக வாக்குகளை தினகரன் + ஓபிஎஸ் + சசிகலா மூவரும் தக்கவைக்க நிறைய வாய்ப்புள்ளது. இவர்கள் பெறப்போகும் வாக்குகள் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பதையும் மறுக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழலில்தான், மதுரையில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் மாநாடு பிரதான கவனம் பெறுகிறது.. கடந்த ஒருவருட காலமாகவே, ஆர்பி உதயகுமார் முதல் செல்லூர் ராஜூ வரை முக்கியத்துவத்தை தந்து எடப்பாடி பழனிசாமி உயர்த்திப்பிடித்த போதிலும், போதிய பலத்தை அவரால் தென்மண்டலத்தில் நிரூபிக்க முடியவில்லை.. சென்ட்டிமென்ட்டாக மதுரையில் மாநாட்டினை எடப்பாடி நடத்துகிறார் என்றாலும், இவையெல்லாம் வாக்குகளாக திரும்ப கிடைக்குமா என்பது சந்தேகம்தானாம்.

சொந்த செல்வாக்கு: சொந்த செல்வாக்கை தெற்கில் எடப்பாடி நிரூபிக்கும்வரை, ஓபிஎஸ், தினகரனை பாஜகவால் தவிர்க்கவும் முடியாத நிலைமை உள்ளது.. இப்போது ஓபிஎஸ் + தினகரன் சந்திப்பின் தாக்கம், முக்குலத்தோர் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று தந்து வருகிறது.. அதுமட்டுமல்ல, தென்மண்டல அதிமுகவின் முக்கிய புள்ளிகளை, தங்கள் பக்கம் இழுக்கவும் இந்த இரட்டையர்கள் புது பிளானில் இறங்கி உள்ளார்களாம். இவர்களை தனிநபராக உதயகுமார் மட்டுமே சமாளிக்க முடியுமா? என்பதும் கேள்வியாக உள்ளது..
"ஓபிஎஸ்சின் கையை பிடித்து இருட்டில்கூட போக முடியும்" என்ற தினகரனின் வார்த்தைகள் பல அர்த்தங்கள் உள்ளதையும் நாம் இங்கே உற்றுகவனிக்க வேண்டி உள்ளது..!!
இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. நேற்றைய தினம் ஓபிஎஸ் + தினகரன் சந்திப்பு நடந்துள்ளது.. மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன், தினகரனுடனான இந்த சந்திப்பை ஓபிஎஸ் நடத்தி உள்ளார்.. ஆனால், வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் போன்ற முக்கிய நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை... இது மிகுந்த கவனம் பெற்று வருகிறது.. ஒருவேளை தினகரனுடனான சந்திப்பில் இவர்களுக்கு உடன்பாடு இல்லையா? அதிருப்தியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை.. ஆனால், ஜெயக்குமார், இதையும் விட்டுவைக்காமல் வழக்கம்போல் விமர்சிக்க தொடங்கி உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications