Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அங்க அவங்க.. இங்க இவங்க.. நடுவில் பாஜக.. ஏகப்பட்ட முட்டுக்கட்டை.. சசிகலாவின் அடுத்த மூவ் "இது"தானாமே

சசிகலாவின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த அக்டோபர் 16ம் தேதி சசிகலாவின் ரீ-என்ட்ரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்தவிதமான அறிகுறியுமே தென்படவில்லை.. இதையடுத்து சசிகலாவின் அரசியல் அடுத்தக்கட்டத்துக்கு எப்படி நகர போகிறது? அதிமுக மேலிடத்தின் திட்டம்தான் என்ன? என்பன போன்ற எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

Recommended Video

    Sasikala இணைப்பு பற்றி தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு - OPS

    30 வருடம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் மறைமுகமாக லாபி செய்து கொண்டிருந்தவர் சசிகலா.. அவருக்கு எடப்பாடி பழனிசாமியை டீல் செய்வது அல்லது அவரை தன்னுடைய வழிக்கு கொண்டு வருவது என்பது கடினமான காரியம் இல்லை.

    முன்பிருந்த சசிகலா இப்போது இல்லை.. குறிப்பாக சிறைக்கு சென்று திரும்பி வந்ததில் இருந்தே அவரிடம் நிறைய மாறுபாடுகள் காணப்படுகின்றன.. எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் ஒவ்வொரு அடியையும் படுஜாக்கிரதையாக எடுத்து வைக்கிறார்.. பக்குவமாக காய் நகர்த்தி வருகிறார்.. இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகிறது.

     ரீ-என்ட்ரி

    ரீ-என்ட்ரி

    ஒன்று, அதிரடியாக எதையாவது செய்துவிடுவதால் தொண்டர்களின் நம்பிக்கையை வெகுவாக இழந்துவிடக்கூடும் என்று நினைக்கிறாராம், மற்றொன்று மத்திய பாஜக அரசையும் கருத்தில் கொண்டு அரசியல் செய்ய வேண்டி உள்ளது.. அதனாலேயே அதிமுக மேலிடத்தை சமரசம் செய்து கொள்ள முடிவு செய்தார்.. அதற்காகவே பலமுறை மறைமுக மற்றும் நேரடியான அழைப்பையும் விடுத்து கொண்டே இருந்தார்.

     கொங்கு மண்டலம்

    கொங்கு மண்டலம்


    அதுமட்டுமல்ல, சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான அவரது சமூகத்தை சேர்ந்த, அதே சமயம் கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்கை பெறுவதற்கு காரணமாக இருந்த ஒரு விஐபி மூலம் சமரச பேச்சுவார்த்தையையும் சசிகலா நடத்தி வந்ததாக சொன்னார்கள்.. இன்னொரு பக்கம் எடப்பாடி தரப்பிடம் பேசிவருவதாகவும் சொன்னார்கள்.. ஆனால் இதிலும் சசிகலாவுக்கு ரிசல்ட் கிடைக்கவில்லை.

    மன்னார்குடி

    மன்னார்குடி

    சசிகலா பெயரை சொன்னாலே எடப்பாடி டென்ஷன் ஆகிவிடுவதை செய்தியாளர்கள் சந்திப்புகளில் தொடர்ந்து காண முடிகிறது.. சசிகலாவை உள்ளே விட்டால் மன்னார்குடி குடும்பம் மொத்தமாகவே உள்ளே நுழைந்துவிடுமே? என்ற கலக்கம் இரட்டை தலைமைக்கு இப்போது வரை உள்ளது.. அதனாலேயே எந்தவித பேச்சுவார்த்தைக்கும் எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்காமல் நழுவி கொண்டிருக்கிறார்.

     அனுமதி மறுப்பு

    அனுமதி மறுப்பு

    ஒருவேளை அக்டோபர் 16ம் தேதியன்று, எப்படியும் தன்னுடைய பலத்தை நிரூபித்து விட வேண்டும் என்று சசிகலா ஒரு கணக்கு போட்டார்.. ஆனால், அதுவும் தோல்வியில் முடிந்துவிட்டது.. இதற்கு காரணம் திமுக அரசு என்கிறார்கள்.. அதிக அளவு கூட்டம் அன்றைய தினம் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் மிஸ் ஆகிவிட்டது.. பிரம்மாண்டமான கூட்டத்தை கூட்ட தமிழ்நாடு போலீஸ் அனுமதி மறுக்கவில்லை என்று அமமுக தரப்பில் இதற்கு காரணம் சொல்கிறார்கள்.

    திமுக

    திமுக

    அப்படியானால் சசிகலாவுக்கு திமுக பயப்படுகிறதா? என்று எடுத்து கொள்ள முடியாது.. ஆனால், ஓபிஎஸ் திமுகவை அடிக்கடி பாராட்டி கொண்டிருக்கும்போது, சசிகலாவை ஊக்குவிக்க திமுக அரசு விரும்பவில்லை என்கிறார்கள்.. மேலும், சசிகலாவால் அதிமுகவை கைப்பற்ற முடியும் என்றும், அப்படி கைப்பற்றினால் அதன்மூலம் திமுகவுக்கு நெருக்கடி கிடைக்கும் என்றும் நம்புகிறது.. அதனாலேயே சசிகலாவின் ரீஎன்ட்ரிக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டது ஆளும் தரப்பு என்கிறார்கள்.

     தொண்டர்கள்

    தொண்டர்கள்

    ஆக, ஒருபக்கம் திமுக, மறுபக்கம் அதிமுக என இரண்டு பக்கமும் சசிகலாவுக்கு செக் வைத்துவரும் நிலையில், சசிகலா இனி அடுத்து என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. இதுகுறித்து 2 விதமான உறுதிப்படுத்தப்படாத கருத்துக்களும் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. முதலாவதாக, ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தொண்டர்களை சசிகலா சந்திக்க போவதாக கூறப்படுகிறது.. அதன் பிறகு, படிப்படியாக மற்ற மாவட்டங்களில் உள்ள அதிமுகவினர், தமது ஆதரவாளர்களை சசிகலா சந்திக்கக்கூடும்.

    தென்மாவட்டம்

    தென்மாவட்டம்

    தென் மாவட்டங்களில் உள்ள அதிமுக அதிருப்தி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசினாலே விரைவில் பல விஷயங்களுக்கு முடிவு எட்டப்படும் என்று சசிகலா நம்புகிறராம்.. 27ம் தேதி தஞ்சாவூர், 28ம் தேதி மதுரை, நெல்லை, 29ம் தேதி பசும்பொன் என அனைத்து இடங்களிலும் சசிகலா பயணம் மேற்கொள்ள போகிறார்.. சசிகலாவின் இந்த நடவடிக்கைகள் அதிமுகவிற்கு மறுபடியும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    மற்றொரு பக்கம், அதிமுகவை கைப்பற்றும் தொடர் முயற்சி தோல்வி அடைந்து வருவதால், அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு, அமமுகவை பலப்படுத்த தினகரன் யோசனை சொல்லியதாகவும், அதை சசிகலாவும் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.. ஆனால், அதற்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.. அமமுகவை கைப்பற்றுவதாக இருந்தால், அதை விடுதலை ஆகி வந்தபோதே சசிகலா செய்திருக்கலாமே.. ஆனால் அவர் செய்யவில்லை..சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்குகூட சசிகலா செல்லவில்லை, அமமுக என்ற பெயரையே அவர் இதுவரை உச்சரிக்காமல் இருப்பதே இதற்கு சாட்சி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

     சுற்றுபயணம்

    சுற்றுபயணம்

    ஆக, ஒருபக்கம் திமுக, இன்னொரு பக்கம் அதிமுக, இதற்கு நடுவில் பாஜக.. என நாலாபக்கமும் செக் வைத்து வரும் நிலையில், இதில் இருந்து சசிகலா எப்படி அரசியல் செய்ய போகிறார்? தென்மாவட்ட சுற்றுப்பயண திட்டமாவது வெற்றியை தருமா? பலம்பொருந்திய எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை சரிய வைப்பாரா? அல்லது தினகரனின் யோசனைக்கு ஓகே சொல்வாரா? என்றெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+