எடப்பாடிக்கு லாஸ்ட் சான்ஸ்.. லோக்சபா தேர்தலுக்கு முன்.. வலைவீசும் அமித் ஷா.. அதிமுகவில் திக்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவிற்கான கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார். இதன் மூலம் கூட்டணிக்கு மீண்டும் திரும்புவதற்கான கடைசி வாய்ப்பை அவர் அதிமுகவிற்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலையின் சில பேச்சுக்கள்.. எடப்பாடி பழனிச்சாமியின் சில நிலைப்பாடுகள் மற்றும் அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.

Edapapdi Palanisamy got the lost call to join in the BJP alliance ahead of Lok Sabha 2024 elections

கூட்டணி குறித்து எடப்பாடி பேச்சு; இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.

கூட்டணி மோதல்: கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களை ஆதரிக்கும் விதமாகவும்.. அவர்களை கவரும் விதமாகவும் பல விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். அதிமுக - பாஜக மோதல் காரணமாக அவர்கள் கூட்டணி முறிந்துள்ளது. 2024 லோக்சபா, 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து தனியாக போட்டியிடும் என்று என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் இஸ்லாமியர்களை கவரும் விதமாக பல விஷயங்களை அவர் பேசி வருகிறார். பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்பது போல பேசி வருகிறார்.

எதிர்க்கவில்லை: அதே சமயம் பாஜகவை எங்கும் எடப்பாடி நேரடியாக எதிர்க்கவே இல்லை. எந்த இடத்திலும் பாஜகவிற்கு எதிராக அவர் கருத்து சொல்லவே இல்லை. உதாரணமாக பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்ற எடப்பாடி, 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இசுலாமிய சகோதரி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குழந்தை உள்பட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து, பாதிக்கப்பட்ட சகோதரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் எடப்பாடி.. குற்றவாளிகளை விடுதலை செய்த பாஜக அரசை பற்றி ஒரு வாரத்தை கூட கூறவில்லை. பாஜகவை விமர்சனம் செய்யாமல் மேம்போக்காக தீர்ப்பை மட்டும் வரவேற்றார்.

மீண்டும் கூட்டணி: இந்த நிலையில்தான் பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் உருவாக்கலாம் என்கிறார்கள், தென்னிந்தியாவில் பாஜக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம்.

அதிமுகவிற்கான கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார். இதன் மூலம் கூட்டணிக்கு மீண்டும் திரும்புவதற்கான கடைசி வாய்ப்பை அவர் அதிமுகவிற்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கடைசி சான்ஸ்: அதன்படி கூட்டணியை புதுப்பிப்பதற்கான கடைசி வாய்ப்பை அதிமுகவிற்கு பாஜக வழங்கி உள்ளதாம். கூட்டணியை மீண்டும் உருவாக்கவில்லை என்றால்.. எடப்பாடி மற்றும் மாஜிக்கள் மீதான டெல்லி வழக்குகள் மீண்டும் தோண்டப்படலாம் என்று கூறப்படுகிறது.

சமயங்களில் இரட்டை இலையை கூட முடக்கும் வேலைகளில் டெல்லி ஈடுபடும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன . தற்போது அமித் ஷாவே இறங்கி வந்து விடுத்து இருக்கும் அழைப்பு அதிமுகவிற்கான கடைசி கூட்டணி அழைப்பு என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+