எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளரா?.. கனவு இருக்கலாம்.. டக்கென்று அண்ணாமலை சொன்ன பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி பிரதமராக வரும் சூழல் உள்ளது என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளதற்கு சிரிப்புதான் என் பதில் கூறயுள்ளார். பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடிதான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, , ஆளுநர் ரவி திருச்சியில் ஒரு விழாவில் பேசினார். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அதற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். ஆளுநர் எழுப்பி இருக்கும் கேள்விகள் மிக முக்கியமான கேள்விகள்.
ஆனால் டி.ஆர். பாலு ஆளுநர் எழுப்பி உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஏக வசனத்தில் ஒருமையில் திட்டுவதை மட்டுமே வேலையாக கொண்டு அறிக்கையை தயாரித்திருந்தார்.

Edappadi Palanisami a prime ministerial candidate May be a dream Says BJP leader Annamalai

தமிழகத்தில் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் சாதிமுத்திரையில் அடைக்கப்பட்டு ஒரு குறுகிய வட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய தலைவராக உருவெடுக்கவில்லை. தமிழகத்தில் குருபூஜைக்கு சென்றால் பத்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் திமுக அந்த அளவிற்கு மாற்றி வைத்திருக்கிறது.

தமிழர் ஒருவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால், அதற்கு தமிழகத்தில் பாஜக ஆட்சி வர வேண்டும். பாஜகவில் யார் வேண்டுமானாலும் வளர தடையில்லை. ஆனால் ஒரே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான். பிரதமர் தமிழர்களை உயர்த்தி அழகு பார்க்கிறார். ஆரியம், திராவிடம் என்பது ஒரு குப்பை. அதற்கு சரியான இடம் குப்பை தொட்டிதான். திராவிடம் என்பது என்ன என திமுகவினருக்கே தெரியாது. அது முட்டாள்தனமான பொய்யான வாதம் என்றார்.

எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "சிரிப்பு தான் எனது பதில்" என சிரித்தபடி பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடிதான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சியில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க 52 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, "முதல்வர் ஸ்டாலின் சொன்னதெல்லாம் பொய். எடப்பாடி பழனிசாமி சொல்வதெல்லாம் உண்மை. மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை இரண்டே முக்கால் ஆண்டுகள் கழித்து கொடுத்துள்ளனர் என்றார்.

பாட்டாளி மக்கள், உழைப்பாளி மக்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால் நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல் ஆக இருந்தாலும் சரி இரட்டை இலைக்கு வாய்ப்பு அளியுங்கள். சூழ்நிலை வந்தால் எடப்பாடியாரையே பிரதமராக கொண்டு வருவோம். எடப்பாடி அவர்கள் சொல்லுகின்ற பிரதமர் சூழ்நிலை வந்தால் எடப்பாடியாரே பிரதமராக வரக்கூடிய அளவுக்கு ஒரு அற்புதமான தீர்ப்பை 40 தொகுதிகளிலும் தமிழ்நாட்டு மக்கள் வழங்க வேண்டும். எடப்பாடியாரின் கரம் ஓங்கினால் டெல்லியிலே எடப்பாடியார் சொல்லக் கூடியது நடக்கும் என்றும் ராஜேந்திர பாலாஜி கூறியதற்குத்தான் அண்ணாமலை சிரிப்பை பதிலாக கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+