லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு மூலம்... அதிமுகவை அச்சுறுத்த முயற்சி.. திமுக அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்..!
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் திமுக அரசு அதிமுகவை அச்சுறுத்த முயற்சிப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், திமுக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சேலம் புறநகர் அம்மா பேரவைச் செயலாளரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவன் இல்லத்திலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என சாடியிருக்கிறார்.
ஜெயலலிதா மீதும், அதிமுக மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு சுறுசுறுப்புடன் கட்சிப் பணிகளையும், தேர்தல் பணிகளையும்,ஆற்றிவரும் செயல்வீரர் இளங்கோவன் என்றும் அவரது செயல்பாடுகளை முடக்கும் நோக்கி காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசால் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என இ.பி.எஸ். தெரிவித்திருக்கிறார்.
அதிமுக என்பது மக்கள் பேரியக்கம் என்றும் அதனை அழிக்க முயற்சிக்கும் திமுக அரசின் நடவடிக்கைகள் அதிமுக உண்மைத் தொண்டர்களின் நல்லாசியோடு முறியடிக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்ட சேலம் இளங்கோவன் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தனிப்பட்ட முறையில் தனி கண்டன அறிக்கையை இ.பி.எஸ். வெளியிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஓ.பி.எஸ். இது தொடர்பாக எந்த கண்டன அறிக்கையும் வெளியிடவில்லை என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சேலம் இளங்கோவன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு தொடர்பாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடுவது தொடர்பாக ஓ.பி.எஸ்.ஸிடம் இ.பி.எஸ். தரப்பு கேட்டதாகவும் ஆனால் அவர் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை காரணமாக கூறி கூட்டறிக்கை வெளியிடுவதில் இருந்து விலகிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த சோதனை இன்று அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள் வீடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அதிமுக ஆட்சியில் பவர் சென்டர்களாக வலம் வந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலக்கத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications