தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
சென்னை: தமிழகத்தில் வீடில்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் படிப்படியாக வீடு கட்டித்தரப்படும் என்ற புதிய வாக்குறுதியை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார்.
சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் தின பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார். எம்.ஜி.ஆரின் வாரிசு அதிமுக தான் என்றும் இன்று கட்சி தொடங்குபவர்கள் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காமல் கட்சி தொடங்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சிறு வயதிலேயே வறுமையை உணர்ந்து வளர்ந்ததால் வறுமையில் இருப்பவர்களின் தேவையறிந்து அவர்கள் கேட்காமலேயே உதவிகளை செய்துகொடுத்தவர் எம்.ஜி.ஆர். என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் தெரிவித்தார்.
மேலும், ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது என்ன செய்திருக்கிறார் என்று வினவிய முதலமைச்சர், திமுக ஆட்சியமைக்கும் என ஸ்டாலின் கனவுகண்டு கொண்டு இருப்பதாக விமர்சித்துள்ளார்.
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி கோரி தாம் டெல்லி செல்லவுள்ளதாகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை அதிமுக அரசு முழுமையாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்தார் என கூறமுடியுமா என வினவினார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications